பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
355

New Page 1

கொள்ளக் கூடியவனே! அன்றிக்கே, வடிவு கண்டபோதே, ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோன்றும்படியாய் இருப்பவனே! என்னுதல். அன்றிக்கே, 1‘மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும். அப்போது, எல்லா உலகங்கட்கும் நிர்வாஹகனாய் ஒப்பற்றவனான சர்வேச்வரன் என்றபடி. இதனால், இவர்க்குப் பேறு என்? என்னில், உன் பெருமையை அழிக்க அன்றோ புகுகிறாய் என்பது. 2நீர் நோவுபடுகிற இடம் என் எல்லைக்குள் அன்று என்ன ஒண்ணாதே உனக்கு.

    நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்-3நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ, உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவாநின்றாய், கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது. 4உன்னைக் காண்பான் நான்-‘ஸ்ரீவைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற உன்னை, மிக்க காதலையுடைய நான், அத்தலை இத்தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவாநின்றேன். உன்னைக் காண்பான் நான்-காண்

____________________________________________________

1. “மூர்த்தி” என்ற சொல்லானது, விக்கிரஹத்தைக் காட்டுமோ? என்ற
  சங்கையையும் பரிஹரித்துக்கொண்டு, மூன்றாவது பொருளினை
  அருளிச்செய்கிறார் ‘மூர்த்தி என்ற சொல்லானது’ என்று தொடங்கி.
  ‘அப்போது’ என்றது, செல்வத்திற்கு வாசகமான போது என்றபடி.

2. உம்மை நழுவ விட்டால் நம் பெருமை அழிந்ததாக வேணுமோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நீர் நோவுபடுகிற’ என்று தொடங்கி.
  ‘உனக்கு’ என்றது, எல்லாவுலகுமுடைய எனக்கு என்றபடி.

3. மேலே கூறிய பொருள்களையெல்லாம் கடாக்ஷித்து, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘நீ ஸ்வரூபங்களால்’ என்று தொடங்கி. படுகாடு -
  வெட்டி வீழ்த்திய காடு.

4. “உன்னை” என்பதற்கு, சௌலப்யத்திலே நோக்காகப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ வைகுண்டம்’ என்று தொடங்கி. கலவிருக்கை
  - நெஞ்சு பொருந்தியிருத்தல். அலமாவாநின்றேன் - மனம் சுழலாநின்றேன்.