|
1என
1என் தொல்லை வினையை அறுத்து
உன் அடி சேரும் சூழ் கண்டாய் - என்னுடைய பழமையான கர்மங்களை வாசனையோடே போக்கி, உன் திருவடிகளை
நான் வந்து கிட்டுவது ஒரு வழியை நீயே பார்த்தருள வேண்டும். கிரமத்திலே செய்கிறோம் என்ன,
அதற்கு எல்லை என்? என்கிறார். உன் அடி சேரும் ஊழ் கண்டிருந்தே - உன் திருவடிகளைக் கிட்டும்
முறையை அறிந்துகொண்டிருந்தே. நாட்டாரைப் போன்று உன்னை அறியாது ஒழியப் பெற்றிலேன் என்பார்
‘இருந்தே’ என்கிறார். தூராக் குழி தூர்த்து-நிறைக்க இயலாத இந்திரியங்களுக்கு இரை இட்டு.
எனை நாள் அகன்று இருப்பன் - இன்னம் எத்தனை நாள் இங்ஙனே இருக்கக் கடவேன்? 2ஸ்ரீபரதாழ்வான்
போல்வார்க்கோ ஒரு நாள் இட்டுக் கொடுக்கலாவது என்றபடி. வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்
- 3‘பிரிந்திருக்கும் நாள் எத்துணை’ என்று கேட்க வேண்டாதவர்கள், அவன்
கண்வட்டத்தில் வசித்து வாழப் பெறுகையாலே வந்த சிலாக்யமான புகழையுடையவர்கள். அன்றிக்கே,
தொல்புகழ் என்பதற்கு, பழைய புகழ் என்னலுமாம். விஷய சந்நிதி தமக்கும் அவர்களுக்கும் ஒத்திருக்க,
அவர்கள் வாழ்கிறபடி எங்ஙனே? என்னில், தம்மைப் போன்று கூப்பிடாமையாலே நினைத்த பரிமாற்றம்
பெற்றார்கள் என்று இருக்கிறார்.
வானோர் கோமானே - 4அவர்கள்
சிலவர் நாள் நடையாடாத தேசத்திலே வசிக்கிறவர்கள் காணும்.
_____________________________________________________
1. “உன்னடி சேரும்” என்பதனை, “உன்னடி
சேரும்படி சூழ்கண்டாய்”
என்றும், “உன்னடி சேரும் ஊழ் கண்டிருந்தே” என்றும் முன்னும்
பின்னும் கூட்டுக.
“ஊழ்” என்றது, சேஷ சேஷிபாவ முறையினை.
2. “எனை நாள் அகன்றிருப்பன்” என்கிறது என்?
‘நாம் நாளிட்டுக் கொடுக்க
வேண்டும்’ என்று நிர்ப்பந்தம் நமக்கு உண்டோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீபரதாழ்வான்’ என்று தொடங்கி.
3. “வாழ்” என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘பிரிந்திருக்கும் நாள்’
என்று தொடங்கி. வாழ்ச்சியை ஏதுவாக்கி, “தொல்புகழார்” என்பதற்கு,
பொருள் அருளிச்செய்கிறார் ‘அவன் கண் வட்டத்தில்’ என்று தொடங்கி.
4. “வாழ்தொல்புகழார்” என்றதனால், தம்மைப்
போன்று “எனை நாள்
அகன்றிருப்பன்” என்று நாளிட்டுக் கொடுக்க வேண்டாதே,
|