|
ய
யாழின் இசையே - மி்டற்று
ஓசை போன்று கர்மத்துக்குத் தகுதியாகப் 1போதுசெய்கை அன்றிக்கே இருத்தல்.
“யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே” என்னக்கடவதன்றோ. அமுதே - 2‘செவிக்கு
அதுவாய், நாவிற்கு வேறு ஒன்று தேட வேண்டாதபடி இனிய பொருளாயிருக்கை. அறிவின் பயனே - ஞானத்துக்குப்
பிரயோஜன ரூபமான சுகம். மனத்திற்கு இனிய பொருளாயிருக்கிறபடி. அரிஏறே - எல்லாப் பொருள்கட்கும்
வேறுபட்ட தன்மையையுடையவனாயிருத்தலால் வந்த மேனாணிப்பையுடையவனே! 3அன்றிக்கே.
கண்களுக்கு முகக்கொள்ள ஒண்ணாத இனிமையையுடையவன் என்றுமாம். 4இங்குள்ளார்க்கும்
அங்குள்ளார்க்கும் உன்னை அநுபவிக்கக் கொடுத்து நிரதிசயபோக்கியனாயிருக்க, நான் இந்திரியங்களுக்கு
இரை இட்டு எத்தனை காலம் அகன்றிருக்கக் கடவேன் என்கிறார்.
(6)
___________________________________________________
எப்பொழுதும் அநுபவித்துக்கொண்டிருப்பவர்கள்
திருக்குடந்தையிலுள்ளவர்கள் என்றார்; அந்தக் காலந்தானும் இன்றிக்கே
எப்பொழுதும் பகவத்
அநுபவம் செய்யுமவர்கள் நித்தியசூரிகள் என்கிறார்
மேல்: அவர்கள்-நித்தியசூரிகள்.
1. போதுசெய்கையாவது, மொட்டிக்கையாய்,
சிலேஷ்மம் முதலியவைகளாலே
மறைக்கப்படுகின்ற நிலையுண்டேயன்றோ கண்டத்துக்கு; அது இன்றிக்கே
இருக்கை என்றபடி. அவன் யாழிசை என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
“யாழ்பயில்” என்று தொடங்கி.
இது, திருவாய்மொழி. 2. 3 : 7.
2. ‘செவிக்கு அதுவாய்’ என்றது,
செவிக்கு இசை போக்கியமாய் என்றபடி.
என்றது, ஒருவனே எல்லா இந்திரியங்களுக்கும் விஷயமாய்
இருக்கிற
தன்மையைத் தெரிவித்தபடி.
3. ‘அன்றிக்கே’ என்று தொடங்கும்
இரண்டாவது பொருளுக்கு,
அப்ரதிருஷ்யமான அரியேறு போலே அளவிட்டு அறிந்து அநுபவிக்க
ஒண்ணாத இனிமையையுடையவன்
என்பது கருத்து. முகக்கொள்ள-
அளவிட்டு அறிய.
4. “வாழ்தொல்
புகழார்” என்றது முதல், “எனைநாளகன்றிருப்பன்” என்றது
முடியக் கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார்
இங்குள்ளோர்க்கும்’
என்று தொடங்கி.
|