|
எனக
எனக்கு ஆவாய்” என்கிற
அம்சத்தில் குறையில்லை; 1“எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்” என்னும்
உன்கூறு செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய். 2அப்படிச் செய்கிறோம் என்னாமையாலே,
என்னுடைய ரக்ஷணத்துக்காக அன்றோ இக்கிடை என்கிறார் மேல்: வளைவாய் நேமிப்படையாய்-பார்த்த
இடம் எங்கும் வாயான திருவாழியை ஆயுதமாகவுடையவனே! 3களையாதொழிகைக்குச் சொல்லலாம்
கண்ணழிவு உண்டோ? என்பார் ‘நேமிப்படையாய்’ என்கிறார். என்றது, ‘பரிகரம் இல்லை
என்னப் போமோ; கைகழிந்து போயிற்று, இனிப் படை திரட்ட வேண்டும்’ என்னும் கண்ணழிவு
உண்டோ? என்றபடி. 4உன் கையில் ஆயுதத்துக்கு வாய் இல்லாத இடம் உண்டோ, அது
வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டாவோ? என்பார் ‘வளைவாய்’ என்கிறார். நேமிப்
படையாய் களைகண் மற்றிலேன் - 5அப்படி இருப்பது என் கையில் ஓர் ஆயுதம் உண்டோ,
பிறர் கையில் ஓர் ஆயுதம் உண்டோ, உன் கையில் ஆயுதம் இல்லையோ. குடந்தைக் கிடந்தாய் மா
மாயா - திருக்குடந்தையிலே வந்து ஆச்சரியமான அழகோடே திருக்கண் வளர்ந்தருளுகிறது அடியார்களுக்காக
அன்றோ. நீ 6“மாம்” என்றதன்பின் இவ்வரு
___________________________________________________
1. ‘நீ உன் காரியத்தைச்
செய்யிலும் செய், தவிரிலும் தவிர்வாய்’ என்றதன்
விவரணம், ‘எல்லாப் பாவங்களிலும்’ என்று
தொடங்கும் வாக்கியம். “ஸர்வ
பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்பது, ஸ்ரீ கீதை.
2. “குடந்தைக் கிடந்தாய்”
என்றதற்கு, அவதாரிகை அருளிச்செய்கிறார்
‘அப்படிச் செய்கிறோம்’ என்று தொடங்கி.
3. “நேமிப்படையாய்” என்றதற்கு,
பாவம் அருளிச் செய்கிறார்
‘களையாதொழிகைக்கு’ என்று தொடங்கி.
4. “வளைவாய்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘உன் கையில்’ என்று
தொடங்கி.
5. “மற்றிலேன்” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘அப்படி இருப்பது’
என்று தொடங்கி.
6. “குடந்தைக்
கிடந்தாய்” என்று அர்ச்சாவதார சௌலப்யம்
சொல்லுகையாலே, ‘நீ, “மாம்” என்றதன்பின்’ என்று
தொடங்கி
அருளிச்செய்கிறார். “மாம்” என்பது, சரமஸ்லோகத்திலுள்ள ஒரு பதம்.
‘நீ மாம் என்றதன்பின்’
என்றது, கிருஷ்ணாவதார சௌலப்யத்தைத்
திருவுள்ளம்பற்றி. ஏற்றமெல்லாம் என்றது, அர்ச்சக பராதீனனாயிருக்கிற
ஏற்றம் எல்லாம் என்றபடி.
|