|
New Page 1
குள்ள ஏற்றமெல்லாம்
பாராய். இதனால், அவதார தசையிலும் அர்ச்சாவதாரம் சுலபம் என்றபடி. 1சக்தி வைகல்யம்
சொல்ல ஒண்ணாது, ‘சுலபன் அல்லன்’ என்ன ஒண்ணாது, ‘ருசியை உண்டாக்குமவன் அல்லன்’
என்ன ஒண்ணாது என்றபடி.
உடலம் தளரா -
சரீரம் கட்டுக் குலைந்து. தளரா-தளர. எனது ஆவி சரிந்து போம்போது - என் உயிரானது முடிந்து
போகுமளவாயிற்றுக் கண்டாய். ‘போம்போது’ என்றது, போகும் அளவாயிற்று என்றபடி. நன்று;
2இதுதான் அந்திம ஸ்மிருதி ஆனாலோ? என்னில், “கட்டைபோன்றவனை, கல் போன்றவனை” என்றும்,
“நான் நினைக்கிறேன்” என்றும் சொல்லுகிறதை இவர் அறியாதவர் அன்றே; இவர்தாம் அவ்வதிகாரிகளும்
அலரே. ஆதலால், பிரிவுத் துன்பத்தாலே சரீரமும் தளர, உயிரும் சரீரத்தை விட்டுப் போகும்
தசையாயிற்று என்கை. இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத நீ இசை - அபேக்ஷிதம் பெற்றிலேனேயாகிலும்,
நான் விரும்பியது சித்திக்கும்படி உன் திருவடிகளைப் பற்றின பற்று நெகிழாமற்பண்ணி
அருளவேண்டும். 3அநுபவம் கிடையாமையாலே, ‘அதற்கு அடியான உபாய அத்யவசாயமும் குலைகிறதோ’
என்று அஞ்சி, இது குலையாமல் பார்த்தருள வேண்டும் என்கிறார். ஒருங்க - ஒரு படிப்பட.
(8)
____________________________________________________
1. “நேமிப்படையாய், குடந்தைக்
கிடந்தாய், மாமாயா” என்ற மூன்றனையும்
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார் ‘சக்தி வைகல்யம்’
என்று
தொடங்கி. சக்தி வைகல்யம் - சக்தி குறைவு.
2. ‘முடிந்து போகுமளவாயிற்றுக்
காண்’ என்று வலிந்து பொருள் கொள்ளுதல்
எற்றிற்கு? இருந்தபடியே அந்திமஸ்மிருதி பிரார்த்தனையாகக்
கொண்டாலோ?
என்று சங்கிக்கிறார் ‘இதுதான்’ என்று தொடங்கி.
“ததஸ்தம் ம்ரியமாணம் து
காஷ்டபாஷாணசந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம்
நயாமி பரமாம் கதிம்”
என்பது, வராஹசரமம். ‘அவ்வதிகாரிகளும்’
என்றது, உபாசகர்களைக்
குறித்தபடி.
3.
“உனதாள் பிடித்தே” என்று, அத்யவஸாயத்தைப் பிரார்த்திக்கிறது என்?
என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அநுபவம் கிடையாமையாலே’
என்று தொடங்கி. ஒரு படிப்பட-பிரிவில்லாதபடி.
|