| New Page 1 
‘அவளை’ என்பது உருபு மயக்கம். 
‘குழலின்’ என்பதில், இன் என்பது, ஐந்தாம் வேற்றுமையுருபு; ஒப்புப்பொருளில் வந்தது. உறழ்பொருவுமாம். 
‘ஏய்’ என்பது, உவமை உருபு. நோக்கியர்க்குக் காமர் என்க.
 ஈடு :- 
முடிவில், 1இப்பத்தைப் பழுது அறக் கற்க வல்லவர்கள், காமினிகளுக்குக் காமுகரைப்போலே 
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனியர் ஆவர் என்கிறார்.
 
 உழலை என்பில் பேய்ச்சி 
முலையூடு அவளை உயிர் உண்டான் - 2உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய 
பூதனை முலைவழியே அவளுடைய உயிரை உண்டான். கழல்கள் அவையே சரணாகக்கொண்ட குருகூர்ச் சடகோபன் 
- 3விரோதிகளை அழிக்கின்ற ஸ்வபாவத்தையுடைய கண்ணபிரானது திருவடிகளையே, விருப்பமில்லாதவைகள் 
நீங்குவதற்கும் விருப்பமுள்ளவைகளை அடைவதற்கும் உபாயம் என்று அறுதியிட்ட ஆழ்வார். விரோதிகளைப் 
போக்குவதும் அவனைத் தருவதும் திருவடிகளேயாம் என்பார் ‘அவையே’ என ஏகாரம் கொடுத்து 
ஓதுகிறார். பலியாவிட்டாலும் தம்மடிவிடாதவரே அன்றோ இவர்; ஆதலின், ‘கொண்ட’ என்கிறார். 
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் - 4திருக்குழல் ஓசையிற்காட்டிலும் 
விஞ்சி, கேட்டார் நோவுபடும்படியாக இருக்கிற ஒப்பற்ற ஆயிரம் திருவாய் மொழியில் இப்பத்தையும்,
5மரங்கள் நின்று மதுதாரைகள் பாய்தல் அன்றோ அங்கு, மரங்களும் இரங்கும் வகை
 
_____________________________________________________ 
1. “மழலை தீரவல்லார்” 
என்று தொடங்கி. திருப்பாசுரத்தில்மேலுள்ளவற்றைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச் செய்கிறார்.
 
 2. ‘உழலை கோத்தாற்போலே 
இருக்கிற எலும்புகளையுடைய’ என்றதற்குக்
 கருத்து அகவாயில் மாத்திரமன்றிக்கே, வடிவிலும் ஒருபசை 
இல்லை
 என்பதாம்.
 
 3. ‘பூதனை முலையுண்டவன் திருவடிகளை 
உபாயமாகக் கொண்ட’ என்றதற்கு,
 பாவம் அருளிச்செய்கிறார் ‘விரோதிகளை’ என்று தொடங்கி.
 
 4. ‘பூதனையை அழித்தவன்’ 
என்று மேலே சொல்லி, “குழலின் மலிய”
 என்கையாலே, “குழலின்” என்பதற்கு, கிருஷ்ணனுடைய திருக்குழலோசை
 என்று பொருள்கூறத் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் ‘திருக்குழல்
 ஓசையிற் காட்டிலும்’ என்று 
தொடங்கி.
 
 5. திருக்குழல் 
ஓசையைக்காட்டிலும், இத்திருவாய் மொழிக்கு ஆதிக்யம்
 யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் 
‘மரங்கள் நின்று’ என்று
 தொடங்கி.
 |