பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
375

இங

இங்கு; இனி, நாம் இரங்குகிற இது 1தன்னேற்றமே அன்றோ இங்குத்தைக்கு; ஆதலின், ‘குழலின் மலிய’ என்கிறது. மழலை தீர வல்லார் - இளமை தீர வல்லார். என்றது, ‘வரில் பொகடேன், கெடில் தேடேன்’ என்று இருக்கை அன்றிக்கே, இவர் சொன்ன ஆற்றாமையோடே சொல்ல வல்லார் என்றபடி. 2அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்” என்பதே அன்றோ இவர் ஆற்றாமை. மான் ஏய் நோக்கியர்க்குக் காமர் - மானை ஏய்ந்த நோக்கையுடைய பெண்களுக்குக் 3காமுகரைப் போலே ஆவர். ஆவது என்? என்னில், “தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்” என்ற இவர் இது பலமாகச் சொல்லும்போது மேற்கூறியதோடு முரண்பட்டதாம்; 4‘ஆனால், சொல்லிற்றாயிற்று என்? என்றால்,

____________________________________________________

  கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து கட்டிநன் குடுத்த பீதக வாடை
  அருங்கல வுருவின் ஆயர் பெருமான் அவனொரு வன் குழலூதின போது
  மரங்கள் நின்றுமது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள்
                                                    தாழும்
  இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும்
                                                    குணமே.

  என்பது, பெரியாழ்வார் திருமொழி.

  “இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
   மரங்களும் இரங்கும்வகை மணிவண்ணவோ என்று கூவுமால்”

  என்பது, திருவாய், 6, 5 : 9.

1. ‘தன்னேற்றமேயன்றோ’ என்றது, “மரங்கள் போல வலிய நெஞ்சம்’
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

2. இவர், ஆற்றாமையோடே கூறியதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘அழுவன்’
  என்று தொடங்கி.

3. ‘காமுகரைப் போலே ஆவர்’ என்றது, பெண்களுக்குக் காமுகர்
  இனியராயிருக்குமாறு போன்று, ஈச்வரனுக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
  போக்யராவர் என்றபடி. ‘ஆவது என்? என்னில்’ என்றது, இருந்தவாறே
  பொருள் கூறாமல், இதனைத் திருஷ்டாந்தமாகக் கொண்டு பொருள்
  கூறுவான் என்? என்னில் என்றபடி. பிரகரணத்திற்கு விரோதம் இல்லாமல்
  வலிந்து பொருள் கூறுகிறோம் என்கிறார் “தூராக்குழி” என்று தொடங்கி.

4. ஆனபின்பு, முதல் சொன்ன பொருளே பொருந்துவதாம் என்று, சங்கை
  முன்னாக, சொன்ன பொருளை உறுதிப்படுத்துகிறார் ‘ஆனால்’ என்று
  தொடங்கி.