|
New Page 1
மேல் கொடிதான நரகம்”
என்னாநிற்கச்செய்தேயும், விஷயத்தில் ஈடுபாடுடையவர்கள்
அது பாராதே மேல் விழுமாறு போலே, இது கற்றாரை எம்பெருமானும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மேல்விழுந்து இனியராகக்
கொள்ளுவர்கள் என்றபடியாம். 1இங்ஙன் அன்றாகில் வஞ்சனையுள்ளவர் வார்த்தையாமே
அன்றோ. இவர் பிராமாணிகர் அன்றிக்கே ஒழிவரே. பிரகரணத்துக்குத் தகுதியாக அன்றோ தலைக்கட்டி
இருப்பதும். ‘அவர்களுக்குப் போல்’ என்ற ஒரு தொடர் இங்குக் கண்டிலோமே! என்னில்,
2முற்றுவமை என்ற ஒரு இலக்கணம் இருக்கிறபடி. உவமை புக்க இடத்தே உபமேயமும் வரக்கடவது.
“தாவி வையங்கொண்ட தடந் தாமரைகள்” என்னாநின்றதே அன்றோ.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஆரா வமுதாழ்வார்
ஆதரித்த பேறுகளைத்
தாராமை யாலே தளர்ந்துமிகத்-தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி
அலமந்தான்
மாசறுசீர் மாறன்எம்
மான்.
ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
____________________________________________________
1. தமக்கு இதனைப் பலமாகச்
சொன்னால் அன்றோ “தூரக்குழி தூர்த்து”
என்றதனோடு முரண்படுவதாம்; பிறர்க்கு இதனைப் பலமாகச்
சொன்னார்
என்றால் வரும் விரோதம் யாது? என்ன, இதற்கு மூன்று விதமாக விடை
அருளிச்செய்கிறார்
‘இங்ஙன் அன்றாகில்’ என்று தொடங்கி. ‘இங்ஙன்
அன்றாகில்’ என்றது, நான் சொன்னபடி
சொல்லாமல், இருந்தபடியே
சொல்லில் என்றபடி.
2. நன்று; ‘எம்பெருமானுக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் இனியராவர்’ என்று
தார்ஷ்டாந்திகத்தைக் காட்டும் சொற்கள் இங்கு இல்லையே?
எனின்,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘முற்றுவமை’ என்று தொடங்கி.
|