ஒன
ஒன்பதாம் திருவாய்மொழி
- “மானேய் நோக்கு”
முன்னுரை
ஈடு :-
1திருக்குடந்தையிலே
சென்று புக்கவிடத்திலும் தம் எண்ணம் நிறைவேறாமையாலே திருவல்லவாழ் ஏறப்போக ஒருப்பட்டார்;
திருக்குடந்தையிலே சென்று புக்கவிடத்தில் தம் எண்ணம் சித்தியாதது போன்று, திருவல்லவாழிலே
முட்டப்போகவுங்கூட அரிதாயிற்று; அங்ஙனம் அரிதாம்படி தமக்குப் பிறந்த துன்பத்தை அந்யாபதேசத்தாலே
அருளிச்செய்கிறார். 2“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில், இவர்தாம் மடல்
எடுக்கப் புக்கு, ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்று தவிர்ந்தார்; இங்கு, ஆற்றாமை தோற்றக்
கண்ட திருப்பதிகள்தோறும் புக்குத் திரியா நின்றார்; இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை.
3அங்கு, அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார், இங்கு, தம்முடைய ஸ்வரூபம் நோக்கப்
பார்க்கிறார்; 4அங்கு வடிவிலே அணைய
____________________________________________________
1. மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் பொருளியைபு
அருளிச்செய்கிறார் ‘திருக்குடந்தையிலே’ என்று தொடங்கி.
2. ஸ்வாபதேசத்திலே சங்கித்துப்
பரிஹரிக்கிறார் ‘மாசறு சோதி’ என்று
தொடங்கி. ‘அவனுக்குத் தாழ்வாம்’ என்றது, அவனுடைய
ரக்ஷகத்வத்துக்குத்
தாழ்வாம் என்றபடி. “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியின்
முன்னுரையில்
‘சூரியன் மறைகையாலே மடல் எடுக்கை தவிர்ந்தார்’ என்று
அருளிச்செய்தாரேயாகிலும், இங்கு,
‘அவனுக்குத் தாழ்வாம் என்று தவிந்தார்’
என்று அருளிச்செய்கையாலே, இதுவும் ஒரு காரணமாகக் கோடல்
தகும்.
3. ‘இதற்கு அடி யாதும் தெரிகிறதில்லை’
என்று சங்கையை இரண்டு
விதமாகப் பரிஹரிக்கிறார் ‘அங்கு அவன்’ என்று தொடங்கியும், ‘அங்கு
வடிவிலே’ என்று தொடங்கியும். ‘அவன் ஸ்வரூபம் பரிஹரித்தார்’ என்றது,
அவனுடைய நிருபாதிக
ரக்ஷகத்வத்துக்குத் தம்முடைய முயற்சி
விரோதமாகையாலே, தம்முடைய முயற்சியை விட்டார் என்றபடி.
‘இங்கு,
தம்முடைய ஸ்வரூபம் நோக்கப் பார்க்கிறார்’ என்றது, அநுபவம்
இல்லாதபோது சத்தை கிடவாமையாலே,
திருப்பதிகள் தோறும் புக்காகிலும்
அவனை அநுபவித்துச் சத்தையை நோக்கப் பார்க்கிறார் என்றபடி.
இதனால், தம்முடைய சத்தையை உண்டாக்கியே அத்தலையை நோக்க
வேண்டுகையாலே தம்முடைய சத்தைச்
சித்திக்கும் பொருட்டுத்
திருப்பதிகள்தோறும் புக்கு அநுபவிக்கப் பார்க்கிறார் என்று
பரிஹரித்தாராயிற்று.
4. ‘அங்கு, வடிவிலே
அணையவேணும் என்று ஆசைப்பட்டார்’ என்றது,
“மாசறுசோதி என்செய்யவாய் மணிக்குன்றத்தை” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. ‘ஆசைப்பட்டார்’ என்றது, ஆசைப்பட்ட
மாத்திரமாகையாலே “தத் தஸ்ய சத்ருஸம்
பவேத் - அச்செயல்
அவருக்கு ஒத்ததாகும்” என்றிருக்கலாம் என்றபடி.
|