பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
378

New Page 1

வேணும் என்று ஆசைப்பட்டார்; பின்பு இவ்வளவும் வர அந்த வடிவிலே இறங்கி மூழ்கினபடியாலே ஆற்றாமை முறுகி, 1“கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்” என்கிறபடியே, அடிமைசெய்ய ஆசைப்படுகிறார். இனி, இவர் தமக்குக் கலவியாவது, மானச அநுபவம் என்றேயன்றோ 2திருவாய்மொழியின் முன்னுரையிலே அடியிலே சொல்லிற்று; இங்ஙனேயிருக்க, திருவல்லவாழ் ஏறப் 3புறப்பட்டுப் போகையாவது என்? உறவினர்கள் விலக்குதலாவது என்? என்னில், 4அந்த மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையுமன்றோ.

    5
எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமையாலே நோவு படுகிறாள் ஒரு பிராட்டி, தன்னுடைய குடிப்பிறப்பு முதலானவற்றையும் பாராமல், திருவல்லவாழ்

___________________________________________________

1. “கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந் தற்கோர் குற்றேவல்
   இம்மைப் பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யும் தவந்தான்என்”

  என்பது, நாய்ச்சியார் திரு. 13 : 9.

  ‘அடிமை செய்ய ஆசைப்படுகிறார்’ என்றது, “அடிகூடுவது என்று
   கொலோ” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

2. ‘திருவாய்மொழியின் முன்னுரையிலே’ என்றது, முதற்பத்திலே ‘திருமகள்
   கேள்வன் ஒன்றிலே’ என்றபடி.

3. ‘புறப்பட்டுப் போகையாவது என்?’ என்றதன்பின், ‘முடியப்
  போகமாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கையாவது என்’
  என்பது எஞ்சி நின்றது; அதனைக் கூட்டிக்கொள்க.

4. இரண்டற்கும் விடை அருளிச்செய்கிறார் ‘அந்த’ என்று தொடங்கி. ‘அந்த
  மானச அநுபவத்திற்கு ஒரு கலக்கம் வர அமையும் அன்றோ’ என்றது,
  திருவல்லவாழ் ஏறப் போகிறது, மானச அநுபவமாய், முடியப்
  போகமாட்டாமல் புறச்சோலையிலே விழுந்து கிடக்கை, மானச அநுபவ
  அபாவத்தால் வந்த கலக்கம் என்றபடி. “உறவினர்கள்” என்றது,
  சுவாபதேசத்தில், சம்பந்த ஞான உபாய அத்யவஸாய நிலைகளை.
  ‘அவர்கள் விலக்குதல்’ என்றது, சம்பந்த ஞான உபாய அத்யவஸாய
  நிலைகளோடு கூடினவராய் நிரூபிக்குமளவில், தம் முயற்சி, அவனையே
  ரக்ஷகனாகக் கொண்டிருத்தல் அவனுக்கே பரதந்திரப்பட்டிருத்தல் ஆகிற
  ஸ்வரூபத்திற்கு முரண்பட்டதாகத் தோன்றுதலைக் குறித்தபடி.

5. பிராசங்கிகமாகச் சங்கித்துப் பரிகாரம் செய்து, பின், இத்திருவாய்மொழியில்
  அருளிச்செய்யப்பட்ட பொருளை விரித்து அருளிச்செய்கிறார்
  ‘எம்பெருமானோடே’ என்று தொடங்கி. ‘குடிப்பிறப்பு முதலானவற்றையும்’
  என்ற உம்மை, அவனுடைய ரக்ஷகத்வம் முதலான குணங்களைத் தழுவுகிறது.