|
ஏறப
ஏறப் புறப்பட்டுப் போகப்புக,
இதனை அறியும் தோழிமார் வந்து ‘இது கார்யம் அன்று, நம் தலைமைக்குப் போராது காண்’
என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க, ‘இனி, நீங்கள் சொல்லுகிறவற்றால் நான் பெற்றது
என்; 1அவ்வூரில் திருச்சோலையும், அங்குண்டான பரிமளத்தைக் கொய்துகொண்டு புறப்படுகிற
தென்றலும், அங்கே தேனைக் குடித்துக் களித்துப் பாடாநின்றுள்ள வண்டுகளினுடைய இனிதான மிடற்றோசையும்,
ஊரிலுண்டான வைதிகக் கிரியைகளின் கோலாஹலங்களும், நகர சம்பிரமங்களும், இவையெல்லாம், நீங்கள்
என்னை மீட்க நினைப்பதைப் போன்று ‘அங்கே போரு போரு’ என்று அழையாநின்றன; ஆன
பின்பு, நீங்கள் சொல்லுகிறவற்றால் பெற்றது என்’ என்று தன் துன்பத்தை அவர்களுக்கு அறிவுறுத்தி
அவர்களை வேண்டிக்கொண்டு; திருவல்லவாழிலே நான் நினைத்தபடியே போய்ப் புக்குப் பரிமாற வல்லேனே
என்று அவர்களுக்குச் சொல்லுகிறாளாயிருக்கிறது. 2‘இதுதான் நான் அநுபவித்தேன்’
என்று சீயர் அருளிச்செய்வர். பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப் பின்பு
ஒருகால் மேல்நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு பெரிய விரைவோடே ‘திருநாளுக்கு உதவ வேணும்’
என்று வர, திருக்கரம்பன் துறையளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே காவிரி பெருகிக் கிடக்க;
இராத் திருநாள் எழுந்தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப்படுவது, வந்து புகுரப் பெறாதொழிவதாய்க்கொண்டு
‘போரநோவு பட்டோம்’ என்று அருளிச்செய்வர். ஏகதத்விதத்ரிதர்கள் சுவேதத்
____________________________________________________
1. இத்திருவாய்மொழியில்
வருகின்ற “தேனார் சோலைகள்”, “தென்றல்
மணம் கமழும்”, “பாண்குரல் வண்டு”, “பாடு நல் வேத
ஒலி”, “மண்ணும்
விண்ணும் தொழநின்ற” என்ற பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம்பற்றி
“அவ்வூரில் திருச்சோலையும்” என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
“மானேய் நோக்கு நல்லீர்”, “நன்னலத்
தோழிமீர்காள்” என்பனவற்றைத்
திருவுள்ளம்பற்றி ‘அவர்களை வேண்டிக்கொண்டு’ என்கிறார்.
2. அங்குத்தை வியாபாரங்களும்
செவிப்படாநிற்கக் கிட்டப்பெறாமல்
சமீபத்தில் நின்று நோவு பட்டமைக்கு இரண்டு திருஷ்டாந்தங்கள்
காட்டுகிறார் ‘இதுதான்’ என்றும், ‘ஏகதத்விதத்ரீதர்கள்’ என்றும் தொடங்கி.
‘திருநாள்’ என்றது,
மார்கழி மாதத்து அத்யயன உத்ஸவத்தை.
‘ஏகதத்விதத்ரிதர்கள்’ என்றது, பிரஹ்மாவினுடைய மானச
புத்திரர்களான
இருடிகளை.
|