பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
381

பிள்ளான் பணிப்பர். மான் ஏய் நோக்கு நல்லீர் - மானை ஒத்த நோக்கினையுடையீராய் எனக்கு நல்லவர்களே! அன்றிக்கே, 1‘பிரிவாற்றாமையாலே நோவுபட்டும், சோலையழகிலே ஈடுபட்டும், நம்முடைய ஹிதவசனத்தாலே தளர்ந்தும் இருக்கின்ற இவளுக்கு, ‘போகலாகாது’ என்று விலக்கும் நம்முடைய வார்த்தைகள் செவிப்படுமாகில், இவள் மோஹிக்கும் என்று விலக்குகிற காரியம் தோற்றும்படி காதரேக்ஷணைகளாய்க் கொண்டிருக்க, ‘மான் ஏய் நோக்கு நல்லீர்’ என்கிறாள் என்னுதல். 2இவள் தனக்கு “அசூயையில்லாத” என்னும் இவ்வளவே அன்றோ வேண்டுவது. “இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி - வைப்பாக வைத்ததையுமெல்லாம் சொல்லா நின்றேன் கேள். அநஸூயவே - 3அத்தலை குறைவற்ற பின்பு இத்தலை கிடக்குமோ.”

    வைகலும் வினையேன் மெலிய - 4ஒருகால் மெலிந்து தரித்திருப்பார்க்கன்றோ பிரிவாற்றலாவது. வைகலும் மெலிய - 5காலம் கழியக் கழியக் காதல் கழியும்படி

____________________________________________________

1. “நோக்கு” என்பதற்குக் கண் என்று பொருள் கொண்டு வேறும் ஒரு
  பொருள் அருளிச்செய்கிறார் ‘பிரிவாற்றாமையாலே’ என்று தொடங்கி.
  ‘விலக்குகிற காரியம் தோற்றும்படி’ என்றது, விலக்குதலால் வந்த
  வியசனம் தோற்றும்படி என்றவாறு. காதரேக்ஷணம் - மான் போன்ற
  பார்வை.

2. விலக்காமல் அதன் காரியம் தோற்றும்படி இருக்கின்றவர்களை
  வெறுப்பின்மை மாத்திரத்தைக் கொண்டு “நல்லீர்” என்று
  கொண்டாடக்கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “இவள்
  தனக்கு” என்று தொடங்கி.

  “இதம் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாமி அநஸூயவே
   ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யத்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஸூபாத்”

  என்பது, ஸ்ரீ கீதை. 9 : 1.

  சுலோகத்தின் அர்த்தத்தை அருளிச்செய்கிறார் ‘இதந்து’ என்று தொடங்கி.

3. ‘அத்தலை குறைவற்ற பின்பு’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக்
   கருத்து, அதிகாரியான நீ குறைவற்ற பின்பு நான் சும்மா இருப்பேனோ
   என்பது.

4. “வைகலும் மெலிய’ என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒருகால்
   மெலிந்து’ என்று தொடங்கி.

5. விஷயாந்தரங்களைப் பிரிந்தவர்கள் தரித்திருக்கவில்லையோ, அப்படி
  இவரும் தரித்திருக்க ஒண்ணாதோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘காலங்கழிய’ என்று தொடங்கி. என்றது, விஷயாந்