பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
382

யன

யன்றோ சிற்றின்பத்தை விரும்பியிருப்பார்க்கு இருப்பது; 1மனனம் பண்ணி, பாவனையாய், பின்பு தரிசனமாய், பிரத்தியக்ஷ சமான ஆகாரமாய், பின்பு சரீரம் நீங்குங் காலத்தைப் பார்த்திருப்பார்படி அன்றோ இது. 2“தஸ்ய-எனக்கு, அத ஸம்பத்ஸ்யே-பின்பு சம்பந்நனாகக் கடவேன் என மேலே வருகின்ற தன்மை ஒருமை வினைமுற்றோடு கூடவேண்டுமே. யாவந்ந விமோக்ஷயே - எத்துணைக்காலம் சரீரத்தினின்றும் விடுபடாமல் இருக்கிறேனோ, தாவ தேவ சிரம் - எனக்கு அவ்வளவே கண்டாய் விளம்பம். அத ஸம்பத்ஸ்யே - பின்பு சம்பந்நனாகக் கடவேன்.” என்றது, 3“இந்த ஆத்மா இந்தச் சரீரத்திலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவை அடைந்து தானான நிலையைப் பெறுகிறான்” என்றபடி. இப்படிச் சரீரம் விட்டு நீங்கும் தினத்தைப் பார்த்திருப்பார் படி அன்றோ இது. வைகலும் வினையேன் மெலிய - தன்னைப் பிரியும்படி

____________________________________________________

  தரங்கள் சிற்றின்பமாகையாலே அவர்களுக்கு ஆறியிருக்கலாம். அங்ஙன்
  அன்றிக்கே, எல்லையில்லாத பேரின்பப் பொருளை விரும்புகையாலே
  இவர்க்குத் தரித்திருக்கப் போகாது என்றபடி.

1. பின்னை இவருடைய பக்தி இருக்கும்படி என்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘மனனம் பண்ணி’ என்று தொடங்கி.

2. ‘சரீரம் நீங்குங்காலத்தைப் பார்த்திருப்பார்’ என்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார் ‘தஸ்ய’ என்று தொடங்கி.

  “தஸ்ய தாவ தேவ சிரம் யாவந் நவிமோக்ஷ்யே அத ஸம்பத்ஸ்யே”
   என்பது, சாந்தோக்யம்.

      எத்துணைக்காலம் சரீரத்தினின்றும் விடுபடாமலிருக்கிறேனோ,
  அத்துணைக்காலந்தான் எனக்குத் தாமதம் அவனைப் பெறுவதற்கு; சரீரம்
  விடுபட்ட பின், அவனை நான் பெறுவேன் என்பது இவ்வுபநிடத
  வாக்கியத்தின் பொழிப்புரையாகும்.

      இந்த உபநிடத வாக்கியத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘தஸ்ய’
  என்று தொடங்கி. ‘தஸ்ய’ என்றது முதல், ‘கூடவேண்டுமே’ என்றது
  முடியவுள்ள வாக்கியத்திற்குக் கருத்து, அந்த என்னும் பொருளையுடைய
  ‘தஸ்ய’ என்னும் சுட்டுப்பெயர், பின்னே வருகின்ற “அதஸம் பத்ஸ்யே -
  பின்பு சம்பந்நனாகக் கடவேன்” என்னும் தன்மையொருமை
  வினைமுற்றோடு சேராமையாலே, “தஸ்ய” என்ற சொல்லுக்குப் பின்
  ‘எனக்கு’ என்ற ஒருசொல்லைக் கூட்டிக் கோடல் வேண்டும் என்பது.

3. எஷ ஸம்பிரஸாத: அஸ்மாத் சரீராத் சமுத்தாய பரஞ்ஜ்யோதி:
  உபசம்பத்ய ஸ்வேந ரூபேண அபிநிஷ்பத்யேத’

 
என்பது, சாந்தோக்யம்.