|
New Page 1
சோலையுண்டாக வேண்டுமோ.
இங்கும் குளிர்ச்சி, வாசனை, மென்மைகளால் குறை இல்லையே. நஞ்சு அரவின் அணை-1படுக்கையும்
தானேயாய்க் காத்து ஊட்டவும் வற்றாயிருக்கை. பின் மூன்று அடிகட்குக் கருத்து, போகிகளாய்
இருப்பார் விடாமல் வசிக்கக்கூடிய தேசம் என்பது. 2இளையபெருமாள் கையும்
வில்லுமாய் வெளிக்காவல் நிற்க, பெருமாளும் பிராட்டியுமாய்க் காட்டிலே இன்பம் அநுபவித்தாற்போலே.
மூவரும் காட்டிலே இன்பத்தை அநுபவித்தார்களேயன்றோ, அப்படியே இங்கும் காவல் உண்டாயிருக்கிறபடி.
அநந்த முகமான காவலேயன்றோ.
3பெருமாளும்
இளையபெருமாளும் பிராட்டியும் சிருங்கி பேர புரத்திலே தங்கியிருந்த அன்று ஸ்ரீகுகப்பெருமாள்
இளையபெருமாளைப் பார்த்து, ‘பெருமாளும் பிராட்டியும் திருக்கண் வளராநின்றார்கள், உமக்குத் தகுதியாம்படி
திருவடிகளிலே தலையாம்படி படுக்கை படுத்தேன்; நாங்கள் காடராய் அங்கே இங்கே திரிகையாலே எங்களுக்கு
உறக்கம் வராது. நீர் இராஜபுத்திரராகையாலே சுகுமாரர்; ‘பரதன் முதலானோர் வருவர்கள்’ என்று
அஞ்ச வேண்டா, நானும் என் பரிகரமும் உண்டு, நீர் திருக்கண் வளர்ந்தருளும்’ என்ன, ‘தாசரதி
சீதையோடு கூடப் பூமியில் உறங்கும்பொழுது என்னால் நித்திரை அடைய எவ்வாறு முடியும்?’ வாரீர்,
மஹாராஜனான
____________________________________________________
1. “நஞ்சு அரவின் அணை”
என்று விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘படுக்கையும்’ என்று தொடங்கி. ‘காத்து ஊட்டவும்
வற்றாயிருக்கை’ என்றது, விரோதிகள் வராமல் காத்து ஊட்டவும்
வற்றாயிருக்கை என்றபடி.
2. விரோதிகள் வாராமல்
காத்து ஊட்டினதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘இளையபெருமாள்’ என்று தொடங்கி. திருஷ்டாந்தத்திற்குப்
பிரமாணம்
காட்டுகிறார் ‘மூவரும் காட்டிலே’என்று தொடங்கி. “ரம்யம் ஆவஸதம்
க்ருத்வா ரமமாணா
வநே த்ரய:” என்பது, சங்க்ஷேப ராமா. 31.
‘அநந்தமுகமான’ என்பது, சிலேடை.
3. இளையபெருமாள் காத்த
பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘பெருமாளும்’ என்று
தொடங்கி.
“கதா தாஸரதௌ பூமௌ ஸயாநே
ஸஹ ஸீதயா
ஸக்யா நித்ரா மயா லப்தும்
ஜீவிதம் வா ஸு காநி வா”
என்பது, ஸ்ரீராமா. அயோத்.
9. குகப்பெருமாளைப் பார்த்து இளைய
பெருமாள் கூறியது.
|