|
சக
சக்ரவர்த்தி அறுபதினாயிரம்
ஆண்டு குழந்தையில்லாதவனாய் வருந்திப் பெற்ற சுகுமாரரான பெருமாள் தரைக்கிடை கிடக்க எனக்குக்
கண்ணுறங்குமோ? அவர் தாம் வசிஷ்டர் முதலான முனிவர்கள் கீழே தறையிலே இருந்தும் அறிவர்.
அதுவுமின்றிக்கே இருக்கிற பிராட்டியோடேகூடக் கிடக்கிறபடி பாரீர்; ஆனபின்பு, எனக்கு உறக்கம்
உண்டாய் அதுபோகைக்கு நினைவுபண்ணி இருக்கிறேன் அல்லேன் காணும், உறக்கம் தேட்டமாய்க் கிடையாமையாலே
இருக்கிறேன். நம் பிரானது நன்னலமே-1“இந்தச் சீதாபிராட்டியினுடைய மனமானது அந்தப்
பெருமாளிடத்தும், அவருடைய மனமானது இந்தப் பிராட்டியிடத்தும் நிலைபெற்றிருக்கிறது” என்னும்படியே,
இருந்ததாகில் நான் ஆறியிரேனோ. 2இரண்டும் அங்கே ஒரு தலைத்தபின்பு நான் எங்ஙனே
ஆறியிருக்கும்படி. நஞ்சு அரவின் அணைமேல் நம் பிரானது நன்னலம்-திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த
வடிவழகைக் காட்டி என்னை அநந்யார்ஹமாக்கினவன்பாடது என்னுடைய நற்சீவன். அன்றிக்கே, திருவனந்தாழ்வானைப்
போலே என்னை அநந்யார்ஹமாக்கினவன் என்னலுமாம். 3நற்சீவன் அவன் பக்கலிலேயாயிருக்க,
கேவலம் சரீரத்துக்கு ஹிதம் சொல்லுகிற இதனால் பிரயோஜனம் என்? அவன் பக்கலிலே சென்று ஹிதம்
சொல்லுங்கோள் வேணுமாகில்.
(4)
_____________________________________________________
1. கருத்து அருளிச்செய்கிறார்.
‘இந்தச் சீதாபிராட்டி’ என்று தொடங்கி.
“அஸ்யா தேவ்யா மந:
தஸ்மிந் தஸ்யச அஸ்யாம் ப்ரதிஷ்டிதம்
தேந இயம் ஸ ச தர்மாத்மா
முஹூர்த்தமபி ஜீவதி”
என்பது, ஸ்ரீராமா. சுந். 15 : 52.
என்றது, பிராட்டிக்கு மனம் பெருமாள்
பக்கலிலேயாய், உயிர் தன் பக்கலிலேயாய்க் கிடந்தது;
எனக்கு அங்ஙன்
அன்றிக்கே, உயிரும் மனமும் பெருமாள் பக்கலிலேயான பின்பு
ஆறியிருக்கப்
போமோ என்கிறார் என்றபடி.
2. ‘இரண்டும் அங்கே
ஒருதலைத்த பின்பு’ என்றது, பிராட்டியைப் போன்று
மனம் மாத்திரமின்றிக்கே, உயிரும் மனமும்
அங்கே ஒரு தலைத்த பின்பு
என்றபடி. “நன்னலம் நம் பிரானது” என்றபோதே, மனமும் அங்கே
ஈடுபட்டு
விட்டது என்பதும் தானே போதரும். நலம்-உயிர்.
3. “நம்
பிரானது நன்னலம் எம்மை நீர் நலிந்து என்செய்தீர்” என்று கூட்டி,
பாவம் அருளிச்செய்கிறார்
‘நற்சீவன்’ என்று தொடங்கி.
|