பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
41

இரண

இரண்டாம் திருவாய்மொழி - “பொலிக பொலிக”

முன்னுரை

    ஈடு :- 1“ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைக் காண்கைக்காக நித்தியசூரிகள் இங்கே வர, அவர்களைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார். இத்திருவாய்மொழியால்” என்று ஆளவந்தார் அருளிச்செய்தாராகத் திருமாலையாண்டான் பணிப்பர். அங்ஙன் அன்றிக்கே, “நண்ணாதார் முறுவலிப்ப’ என்ற திருவாய்மொழியிலே, சம்சாரிகள் படுகிற கிலேசத்தை நினைத்து, அதற்குப் பரிஹாரமாக, ‘ஒன்றுந் தேவும்’ என்ற திருவாய்மொழியிலே பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேசித் திருத்த, அதனாலே திருந்திச் சம்சாரம் பரமபதம் என்ற வேறுபாடு இல்லாமல் அங்குள்ளாரும் இங்கே வரலாம்படி இருக்கிற இருப்பைக் கண்டு மங்களாசாசனம் செய்கிறார்” என்று இங்குள்ளார் பக்கலிலே பிராதாந்யம் தோற்ற எம்பெருமானார் அருளிச்செய்வர்.

    2
தாம் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துப் பேச, அதனாலே திருந்தின சத்துவ குணமுடையார் அடங்கலும் எங்கும் பரந்திருக்கிறபடியையும், குறிக்கோளின்மையாலும் அறிவின்மையாலும் இராஜசராயும் தாமசராயு

_____________________________________________________

1. இத்திருவாய்மொழிக்கு இரண்டு வகையாக அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘ஆழ்வாருடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை’ என்றது, ஆழ்வார் உபதேசத்தாலே
  திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய கூட்டத்தைத் தெரிவித்தபடி,
  ‘நித்தியசூரிகள் இங்கே வர’ என்றது, இத் திருவாய்மொழியில் வருகின்ற
  “தேவர்கள் தாமும் புகுந்து”, “நேமிப்பிரான் தமர் போந்தார்” என்னும்
  பாசுரப் பகுதிகளைத் திருவுள்ளம் பற்றி. ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹத்திலே
  நித்தியசூரிகளுக்குப் பிராதாந்யம் தோற்றும். இதனால், “ஒன்றும் தேவும்”
  என்ற திருவாய்மொழிக்கும், இத்திருவாய்மொழிக்கும் நேரே பொருள்
  இயைபு தோன்றும். இடையேயுள்ள “கையார் சக்கரம்” என்ற திருவாய்
  மொழி, பிராசங்கிகம். (இடைபிறவரல்.)

2. பாசுரங்களில் கூறப்படும் பொருள்களை உட்கொண்டு அவற்றை விவரணம்
  செய்கிறார் ‘தாம் பகவானுடைய’ என்று தொடங்கி. “கடல்வண்ணன்
  பூதங்கள்” என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சத்துவ குணமுடையார்’
  என்றும், “மலியப் புகுந்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘எங்கும்
  பரந்திருக்கிறபடியையும்’ என்றும், “உள்ளீரேல்” என்றதனை நோக்கிக்
  ‘குறைந்தவர்களாயிருக்கிறபடியை’ என்றும் அருளிச்செய்கிறார்.
  ‘சத்துவகுணமுடையார் மேற்கொண்ட