பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
42

New Page 1

முள்ளார் குறைந்தவர்களாயிருக்கிறபடியையும், சத்துவ குணமுடையார் மேற்கொண்டதாகையாலே ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப் போருகிறபடியையும், அதற்கு மாறுபட்ட தர்மங்கள் மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும், தேச காலங்கள் அதிகாரிகள் அங்கங்கள் என்கிறவற்றுக்கு உண்டான நன்மைகள் 1“எல்லாத் தர்மங்களுக்குள்ளே வைஷ்ணவ தர்மம் உத்தமமானது” என்கிறபடியே, 2பகவானுடைய பரிசத்தாலேயாயிருக்கிறபடியையும், 3அது இல்லையாகில் எல்லா நன்மைகளும் உண்டானாலும் அவை அடையத் தண்ணியனவாயிருக்கிறபடியையும் சொல்லி, தம்மாலே திருந்தின 4ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்,

__________________________________________________

  தாகையாலே’ என்றது, “மேவித்தொழும் அடியாரும் பகவரும் மிக்கது
  உலகே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. “பெரியகிதயுகம்பற்றி” என்றதனைத்
  திருவுள்ளம்பற்றி ‘உத்தம தர்மமான ஸ்ரீ வைஷ்ணவ தர்மமே பிரசித்தமாய்ப்
  போருகிறபடியையும்’ என்கிறார். ‘அதற்கு மாறுபட்ட தர்மங்கள்
  மறைந்தவைகளாய்ப் போருகிறபடியையும். என்றது. “திரியும் கலியுகம் நீங்கி”
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி அன்றி, “சமயத்தை எல்லாம் எடுத்துக்
  களைவன போலே” என்றதனைத் திருவுள்ளம்பற்றி எனலுமாம். ‘தேச
  காலங்கள்’ என்றது “மண்மேல், கலியும் கெடும்” என்றதனைத்
  திருவுள்ளம்பற்றி. இவை இரண்டும் அதிகாரி அங்கங்களுக்கும் உபலக்ஷணம்.

1. சர்வேஷாம் கில தர்மாணாம் உத்தமோ வைஷ்ணவோ விதி:
  ரக்ஷதே பகவாந் விஷ்ணு: பக்தாந் ஆத்வ சரீரவத்.

  என்பது, பாரதம் மோக்ஷதர்மம். ஸ்ரீவைஷ்ணவ தர்மம் உத்தமமான
  தர்மமானபடி என்? என்னில், ஸ்ரீ வைஷ்ணவர்களைச் சர்வேச்வரன்
  “ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம்” (பகவத். கீ. 7 : 18.) என்று, தனக்குத்
  தாரகமாகக் கொள்ளுகையாலே என்க.

2. பாகவதர்களுடைய பரிசத்தாலே என்னவேண்டியிருக்க, அங்ஙனம் கூறாது,
  பாகவதர்களுக்குப் பகவானோடு உண்டான அழிதலில்லாத சம்பந்தத்தைத்
  திருவுள்ளம்பற்றிப் ‘பகவானுடைய பரிசத்தாலே’ என்கிறார்.

3. பகவானுடைய சம்பந்தம் உண்டானால் தேச காலங்களுக்கு நன்மை உண்டு
  என்று சொல்லுகையாலே, இந்தச் சம்பந்தம் இல்லாத போது அவற்றால்
  பயன் இல்லை என்ற பொருளும் தோன்றுகையாலே, அதனை
  அருளிச்செய்கிறார் ‘அது இல்லையாகில்’ என்று தொடங்கி. அது
  பகவானுடைய சம்பந்தம். அவை-தேச காலங்கள்.

4. ‘ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருவடிகளிலே விழுந்தும்’ என்றது, “தொழுது
  தொழுது நின்று ஆர்த்தும்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
  “தொழுதுய்ம்மினீரே”, “உய்யும் வகை இல்லை” என்பனவற்றைத்
  திருவுள்ளம்பற்றித் ‘திருந்துகைக்குத் தகுதியுடையாரை’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார்.