|
பண
பண்ணினாரும்கூடக் காணும்படியான விஷயத்தை, காண்கைக்கு
யோக்கியதை உண்டாய் வைத்தே காணாதபடியான பாவத்தைப் பண்ணினேன் என்றபடி. 1மாண்
குறள் கோலப்பிரானேயன்றோ. இனி, ‘காண்பது எஞ்ஞான்று கொலோ வினையேன்’ என்பதற்கு, நீங்கள்
காட்டுகைக்கு விரைய ஆறியிருக்கக்கூடிய நான், இன்று ‘காண்பது எஞ்ஞான்றுகொலோ’ என்னும்படியான
பாவத்தைப் பண்ணினேன் என்னுதலுமாம். கனி வாய் மடவீர்-உங்களை நான் பண்டு போலே காண்பது என்றோ.
2“ஞானிகளுக்கு நான் மிகவும் பிரியமுள்ளவன், அவர்களும் எனக்குப் பிரியமுள்ளவர்களே”
என்னும்படியன்றோ அவர்கள் இருப்பது. 3இவள் மாசுடை உடம்பொடு தலை உலறி
வாய்ப்புறம் வெளுத்திருக்க, அவர்கள் தங்களைப் பேணி இரார்களே. 4அவர்கள் பண்டு
போலே இருக்கக் காண்கையும் இவளுக்கு விருப்பமானபடி.
பாண்குரல் வண்டினொடு-5இவற்றின்
குரல் ஓசையில் வெள்ளோசையாய்க் கழியுண்பது இல்லை, பரப்பு
_____________________________________________________
1. அப்படிப் பாபம் பண்ணினவர்களும் அவனைக்
கண்டார்களோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மாண் குறள்’ என்று தொடங்கி.
2. “கனிவாய் மடவீர்” என்றதனை இப்பொழுதுள்ள
நிலைக்கு
விசேஷணமாக்காமல் ‘பண்டு போலே காண்பது’ என்று இறந்த
காலமாக்கிப் பொருள்
அருளிச்செய்வதற்குக் காரணம் என்? என்ன,
இவள் அதரம் வெளுத்திருக்க, அவர்கள் அதரம் செவ்வி
பெற்றிருக்கக்
கூடாமையாலே என்று கூறத் திருவுள்ளம்பற்றி, இவள் விஷயத்தில்
அவர்களுக்கு உண்டான
சிநேகத்தைத் திருஷ்டாந்த மூலமாகக்
காட்டுகிறார் ‘ஞானிகளுக்கு’ என்று தொடங்கி.
“ப்ரியோஹி ஜ்ஞாநிந: அத்யர்தம் அஹம் ஸச
மம ப்ரிய:”
என்பது, ஸ்ரீகீதை. 7 : 17. என்றது, ஞானி விஷயத்தில்
ஸர்வேச்வரன் மிகவும்
சிநேகித்திருக்குமாறு போன்று, இவர்களும் இவள் விஷயத்திலே மிகவும்
சிநேகித்தவர்களாயிருப்பார்கள்
என்றபடி.
3. இப்படி மிக்க அன்புள்ளவர்களாகையாலே,
இவள் அதரம் வெளுத்திருக்க,
அவர்கள் அதரம் நிறம் பெற்றிருத்தல் கூடாது என்கிறார் ‘இவள்
மாசுடை’
என்று தொடங்கி.
4. இவள் அவனைப் பிரிந்த சமயத்திலே அவர்கள்
அதரம் உறாவின
உறைப்பை அருளிச்செய்கிறார் ‘அவர்கள் பண்டு’ என்று தொடங்கி.
5. “குரல்”
என்னாமல். “பாண் குரல்” என்று விசேடித்ததற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘இவற்றின்’ என்று
தொடங்கி. வெள்ளோசை
-சாரமில்லாத ஓசை. பாட்டாக-இசையாக.
|