|
அடங
அடங்கலும் பாட்டாக
இருக்கும். என்றது, இயல் கற்று இசையோடு கூட்டிற்று அன்று அவற்றுக்கு, பேச்சே தொடங்கி இசை என்றபடி.
1‘தேன் போலே இனிய பாட்டு’ என்னுமது போய், வடிவே தேனாய் அதற்கு மேலே பாட்டும்
ஆனால் மிகவும் இனியதாயிருக்குமன்றோ. அன்றிக்கே, பாண் குரல் - இசை ரூபமான மிடற்றோசை என்னுதல்.
பசுந்தென்றலுமாகி எங்கும் - 2கலப்பு அற்ற தென்றலுமாயிருக்கை. என்றது, 3பலவிடங்களிலே
காலிட்டு வாராதே தாய்தலைத் தென்றலாயிருக்கையைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, பசுந்தென்றல்-இளந்தென்றல்
என்றுமாம். சேண் சினை ஓங்கு மரம் செழுங்கானல் - கவடுகளானவை சுற்றிலே பணைத்திருப்பனவாய் மேலோக்கத்தை
உடைத்தான மரங்களையுடைத்தாகையாலே அழகிய சோலையையுடைய. அன்றிக்கே, செழுங்கானல் என்பதற்கு,
காண்பதற்கு இனிய கானல் என்னுதல். கானல்-கடற்கரைச் சோலையாதல், நெய்தல் நிலமாதல். சினைக்கு
ஓக்கம், சுற்றிலே வளர்தல். மரத்துக்கு ஓக்கம், மேலே உயர்தல். மாண் குறள் கோலப்பிரான்
மலர்த்தாமரைப் பாதங்கள் காண்பது எஞ்ஞான்றுகொலோ-தன்னுடைமை பெறுகைக்குத் தான் இரப்பாளனாய்,
பெருவிலையனான வடிவினைச் சிறுகவிட்டு மிக்க அழகையுடையவனாய், 4சௌலப்யத்தையும்
அழகையும் திருவல்லவாழில் அடியார்களை அநுபவித்துக்கொண்டு நிற்கிறவனுடைய தனக்குமேல் ஒன்றில்லாததான
இனிமையையுடையதான
_____________________________________________________
1. ‘பேச்சே தொடங்கி
இசை’ என்றதனால் போந்த பொருள்
நிரதிசயபோக்யத்வம் என்று திருவுள்ளம்பற்றி அதன் முடிவின்
எல்லையை
அருளிச்செய்கிறார். ‘தேன் போலே’ என்று தொடங்கி. ‘தேன்’ என்று
வண்டுக்குப் பெயர்.
2. “பசுந்தென்றல்” என்பதற்கு,
செவ்வித்தென்றல் என்று பொருள் கூறத்
திருவுள்ளம்பற்றி. அதற்குச் ‘செவ்வி’ யாது? என்ன,
‘கலப்பற்ற’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
3. ‘கலப்பற்ற’ என்றதனை
விவரிக்கின்றார் ‘பலவிடங்களிலே’ என்று
தொடங்கி. ‘பலவிடங்களிலே காலிட்டு வாராதே’ என்றது,
பல சரீரங்களிலே
பட்டு அந்தத் துர்நாற்றம் கலந்து வராமல் என்றபடி. ‘தாய்தலைத்
தென்றலாயிருக்கை’
என்றது, மேல் வருகின்ற தென்றலுக்கெல்லாம் தாயாய்,
முந்தி வரும்போதே இங்கே வருமதாயிருக்கையைத்
தெரிவித்தபடி.
4.
‘சௌலப்யத்தையும் அழகையும்’ என்றது, “மாண்”, “கோலம்” என்ற
சொற்களைத் திருவுள்ளம்பற்றி.
|