ய
யாலே இனியதாய்க்கொண்டு
திருநாமங்களைச் சொல்லக் கூடவற்றே என்கிறாள்.
தொல் அருள் நல்வினையால்
சொலக் கூடும் கொல்-1அவனுடைய ஸ்வாபாவிகமான அருளாலே அவனைக் காணப் பெற்று, அதனால்
வந்த பிரீதியாலே உகந்து கொண்டு திருநாமத்தைச் சொல்லக்கூடவற்றோ என்னுதல்; நல்வினை -
உகப்பு. அன்றிக்கே, ஸ்வாபாவிகமான கிருபையால் உண்டான புண்ணியத்தாலே அவனைக் கண்டு திருநாமங்களைச்
சொல்லக் கூடவற்றோ என்னுதல். 2“நா, நீர் அற்று இருக்கை பாபத்தின் பலம் அன்றோ.
நாக்கிலே நீர் உண்டாய்த் திருநாமம் சொல்லவல்லோமே என்கிறாள்’ என்று அம்மங்கி அம்மாள்
வாக்கியார்த்தமாக அருளிச்செய்வர் என்று அருளிச்செய்வர். தொல் அருள் மண்ணும் விண்ணும்
தொழ நின்ற திருநகரம்-தன்னுடைய கண்ணழிவற்ற கிருபையை இவ்வுலகத்திலுள்ளாரும் நித்திய விபூதியிலுள்ளாரும்
தொழநின்ற மஹா நகரம். நல் அருள் ஆயிரவர்-மக்களைக் காப்பாற்றுவதில் 3எம்பெருமானைக்காட்டிலும்
அநுக்கிரஹ சீலர்களாயிருக்குமவர்கள். நலன் ஏந்தும் திருவல்லவாழ் - 4அவனுடைய கல்யாண
____________________________________________________
1. “தொல் அருள் நல்வினையால்”
என்பதற்கு, இரண்டு வகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார். ஒன்று, தொல்லருளாலே அவனைக் காணப்பெற்று,
அதனால் வந்த பிரீதியாலே திருநாமங்களைச் சொல்லக் கூடுமோ?
என்பது. இதனை அருளிச்செய்கிறார்
‘அவனுடைய’ என்று தொடங்கி.
இந்த யோஜனையில், “நல்வினை” என்பது, சத்கர்மமாய், அதன் பலமான
பிரீதியைக் காட்டுகிறது. நல்வினை-புண்ணியம்.
2. ‘நா, நீர் அற்றிருக்கை’
என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து, நா
நீர் அற்றிருக்கை பாபத்தின் பலமானால், நாக்கில்
நீர் வருதல்
புண்ணியத்தின் பலமாகையாலே, அவனுடைய கிருபையாகிற
புண்ணியத்தாலே நாக்கிலே நீர்
உண்டாய்த் திருநாமம் சொல்ல
வல்லோமே என்கிறாள் என்பது.
3. “நல்லருள்” என்று விசேடித்ததற்கு,
பாவம் அருளிச்செய்கிறார்
‘எம்பெருமானைக்காட்டிலும்’ என்று தொடங்கி.
4. “நலன் ஏந்தும்” என்பதற்கு இரண்டு பொருள்: ஒன்று, அவனுடைய
கல்யாண குணங்களைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற
ஊர் என்பது.
பிரேமத்தாலே அவனுடைய ரக்ஷகத்வத்தைத் தாங்கள் ஏறிட்டுக்கொண்டு
அவனுக்கு மங்களாசாசனம்
செய்கிற ஊர் என்பது மற்றொரு பொருள்.
நலன்-அன்பு. இவ்விரு பொருள்களையும் முறையே அருளிச்செய்கிறார்
‘அவனுடைய’ என்று தொடங்கியும், ‘அன்பாலே’ என்று தொடங்கியும்.
|