New Page 1
குணங்களைக் கொண்டாடி வசிக்கின்ற ஊர் என்னுதல்.
அன்றிக்கே, அன்பாலே மங்களாசாசனம் செய்து வசித்துக்கொண்டிருக்கும் ஊர் என்னுதல். நல் அருள்
நம்பெருமான் - நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன். 1நல்லருளாவது,
வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், நாராயண சப்தார்த்தமாகும். அர்த்தத்தை அருளிச்செய்து
பின்பு சப்தத்தை அருளிச்செய்கிறார்: நாராயணன் நாமங்களே - 2நாராயண சப்தம்,
தர்மி நிர்த்தேசம். இந்த ஸ்வபாவங்களாலே நிரூபிதமான வஸ்துவுக்கு உண்டான குணங்களுக்கும் செயல்களுக்கும்
வாசகங்கள் மற்றைத் திருநாமங்கள்.
(10)
541
நாமங்க ளாயிர முடைய நம்பெரு மானடிமேல்
சேமங்கொள் தென்குரு கூர்ச்சட கோபன் தெரிந்துரைத்த
நாமங்க ளாயிரத் துள்இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர்மேல் செப்புவார் சிறந்தார்
பிறந்தே.
பொ-ரை :-
ஆயிரம் திருநாமங்களையுடைய நம்பெருமானது திருவடிகளையே தமக்குக் காவலாகப் பற்றின
தென்குருகூர்ச் சடகோப
____________________________________________________
1. நாராயண சப்தத்தைச் சொல்லும்போது
முன்பு பொருளைச்
சொல்லிக்கொண்டு பின்பு மந்திரத்தைச் சொல்லுதல் என்ற
நிர்ப்பந்தமுண்டாகையாலே,
நாராயண சப்தார்த்தமாக யோஜிக்கிறார்
‘நல்லருளாவது’ என்று தொடங்கி. முதல்பத்து, 73-ஆம்
பக்கம் காண்க.
அன்மொழித் தொகைப் பொருளில், வாத்சல்யம். வேற்றுமைத் தொகைப்
பொருளில், ஸ்வாமித்வம்.
2. நாராயண
சப்தமும் சர்வேச்வரனுடைய திருநாமம் அன்றோ, இதனைப்
பிரதானமாகச் சொல்லுவான் என்? என்ன,
‘நாராயண சப்தம்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘தர்மி நிர்த்தேசம்’
என்றது,
ஸ்வரூப நிரூபகம் என்றபடி. ‘இந்த ஸ்வபாவங்களாலே’ என்றது, வாத்சஸ்ய
ஸ்வாமித்வங்களாலே
என்றபடி. குணங்களில் வைத்துக்கொண்டு ஞான
ஆனந்த அமலத்வ ஆதி குணங்கள் நிரூபகங்களாய், அல்லாத
குணங்கள்
இவற்றாலே நிரூபிதமான ஸ்வரூபத்திற்கு விசேஷணமானாற்போலே,
திருநாமங்களிலும் நாராயண
சப்தம் ஸ்வரூப நிரூபகமாய், அல்லாத
திருப்பெயர்கள் இந்தத் திருநாமத்தாலே நிரூபிதமான வஸ்துக்கு
உண்டான
குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமாயிருக்கும் என்றபடி.
|