ர
ராலே ஆராய்ந்து
அருளிச்செய்யப்பட்ட திருநாமங்களைப் போன்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள், இவை பத்துத் திருப்பாசுரங்களும்
சேமத்தைக் கொண்டிருக்கின்ற அழகிய திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்தின் மேலனவாம்;
இவற்றைச் சொன்னவர்கள் இந்தச் சரீர சம்பந்தத்தோடே இருந்தும் பகவானுடைய அநுபவமாகிற சிறப்பினையுடையவராவர்கள்
என்றவாறு.
வி-கு :-
அடிமேல் - திருவடிகளை. திருவடிகளிலே என்னலுமாம். சேமம்-காவல். தென்-அழகு. தெற்குத் திசையுமாம்.
செப்புவார் பிறந்தே சிறந்தார் என மாற்றுக. செப்புவார்: வினையாலணையும் பெயர்.
ஈடு :-
முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் சம்சாரத்தில் இருந்து வைத்தே
பகவானுடைய குணாநுபவத்தாலே எல்லாரிலும் சிறந்தவர்கள் என்கிறார்.
நாமங்கள் ஆயிரமுடைய
நம்பெருமான் - 2“ஸ்வயம் பிரகாசகனான சர்வேச்வரன் ஆயிரம் திருப்பெயர்களையுடையவனாயிருக்கிறான்”
என்கிறபடியே, குணங்களுக்கும் செயல்களுக்கும் வாசகமான திருப்பெயர்களை யுடையவனாகையாலே சர்வேச்வரனாகப்
பிரசித்தனானவன். 3‘நம்’ என்பது, பிரசித்தியைக் காட்டும். பெருமான்-சர்வேச்வரன்.
அடிமேல் சேமம்கொள் தென்குருகூர்ச் சடகோபன் - புறம்புள்ள காற்கட்டுக்களை விட்டு, அவன் திருவடிகளையே
தமக்கு ரக்ஷகமாகப் பற்றின ஆழ்வார். தெரிந்து உரைத்த நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் -
அவனுடைய திருநாமங்கள் போலே, குணங்களையும் செயல்களையும் தெரிவிக்கின்ற ஆயிரத்திலும் ஆய்ந்து
___________________________________________________
1. “இவை பத்தும் செப்புவார்
சிறந்தார் பிறந்தே” என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. “ஸஹஸ்ரபாஹு: ஸர்வஜ்ஞோ
தேவோ நாமஸஹஸ்ரவாந்”
என்பது, பாரதம்.
3. “நம்பெருமாள் நம்மாழ்வார்
நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவரவர்தம் ஏற்றத்தால்”
என்றது உபதேச ரத்தினமாலை.
‘ந என்பது,
சிறப்புப் பொருள் உணர்த்தும்; நக்கீரன், நச்செள்ளை
என்றாற்போல’ என்பர் நச்சினார்க்கினியர்.
|