பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
427

பத

பத்தாம் திருவாய்மொழி - “பிறந்தவாறும்”

முன்னுரை

    ஈடு :- 1‘திருவல்லவாழ் என்னும் திவ்விய தேசத்திலே சென்று புக்கு அங்கு நிற்கின்றவனோடே பரிமாற வேண்டும் என்று மநோரதித்துக் கொண்டு போக, கால்நடை தாராமல் நடுவழியிலே விழுந்து கிடந்து கூப்பிட்டார்; இனி, “இவ்வளவில் குணாநுபவம் பண்ணியாகிலும் தரிப்போம்” என்று பார்க்க, அதுதானும் பேற்றினைப் போன்று அரிது என்னலாம்படி சைதில்யத்தை விளைப்பிக்க; எல்லா அவஸ்தைகளிலும், உன்னைப் பிரிந்து நின்றாலும் தரித்து நின்று குணாநுபவம் பண்ண வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று திருவடிகளிலே சரணம் புகுகிறார்.

   
2இருடிகளுக்குண்டான சம்சார பயத்தை ஒத்ததாயிற்று ஆழ்வார்களுக்குப் பகவானைப் பிரிந்த விரஹத்தால் வரும் கிலேசம்; 3அவர்கள், தங்கள் தங்கள் பேற்றிற்குத் தாங்கள் தாங்கள் சில முயற்சிகள் செய்யாநிற்பர்கள், இவர்கள் அத்தலையாலே பேறாகுமளவும் அசோகவனத்திலே பிராட்டியைப் போன்று துடியாநிற்பர்கள்;

____________________________________________________

1. மேல்திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
  அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, மேல்திருவாய்மொழியிலே கூறியதை
  அநுவாதம் செய்கிறார் ‘திருவல்லவாழ்’ என்று தொடங்கி. ‘கிடந்து
  கூப்பிட்டார்’ என்றது முடிய. ‘இனி, இவ்வளவில்’ என்றது முதல்,
  ‘திருவடிகளிலே சரணம் புகுகிறார்’ என்றது முடிய, கூரத்தாழ்வானுடைய
  நிர்வாஹத்தைச் சுருங்க அருளிச்செய்கிறார். ‘குணாநுபவம் பண்ணியாகிலும்’
  என்ற இவ்விடத்திலே “கோவிந்தன் குணம் பாடி ---- ஆவி
  காத்திருப்பேனே” என்னும் நாய்ச்சியார் திருமொழி அநுசந்தேயம். 8. 3.

2. மற்றும் பகவத் விஷயத்தில் கைவைத்திருப்பார் பலரும் உளரே?
  அவர்களுக்கு இவ்வாற்றாமை காண்கின்றிலோமே? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘இருடிகளுக்குண்டான’ என்று தொடங்கி. இதனால்
  இருடிகளுக்குச் சம்சார பயமாத்திரமொழிய, பகவானைப் பிரிந்த
  விரஹத்தால் வரும் கிலேசம் இல்லை என்றபடி.

3. இருவரும் பகவத் விஷயத்திலே சேர்ந்திருக்க, அவர்களுக்கு
  இல்லாமற்போவான் என்? இவர்களுக்கு உண்டாவான் என்? என்ற
  சங்கையிலே, இரண்டற்கும் காரணத்தை அருளிச்செய்யத் திருவுள்ளம்
  பற்றி, இருடிகளுடையவும் ஆழ்வார்களுடையவும் பிரதிபத்தி சரீரத்தை
  அருளிச்செய்கிறார் ‘அவர்கள்’ என்று தொடங்கி.