பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
429

எல

எல்லாச் செயல்களிலும் அகப்பட்டிருப்பார் ஒருவர். 1அர்ச்சாவதாரத்தில் தம் அபேக்ஷிதம் பெற ஆசைப்பட்டவர், அது கிடையாமையாலே அவதாரங்களிலே போகிறார்; ‘விபவம் உள்ள இடத்தே சென்றால் சிறிது அபேக்ஷிதம் கிடைக்கும்’ என்று இருப்பரே. நன்று; அவதாரங்களிலே இழந்தார்க்கும் 2இழவு தீர்க்கிற இடம் அர்ச்சாவதாரமாயிருக்க, இதனை விட்டு, ‘பெறலாம்’ என்று அவதாரமுள்ள இடம் தேடிப் போகையாவது என்? என்னில், அர்ச்சாவதாரத்தில், கண்களால் காண முடியாதவனான தன்னை, சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்குகையும் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கையும் ஒழிய, குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்யக் கடவோம் அல்லோம் என்று சங்கல்பித்திருக்கையாலே, 3‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி அதிநிர்ப்பந்தம் செய்யக் கடவோமல்லோம்’

____________________________________________________

1. மேல் மூன்று திருவாய்மொழிகளிலும் அர்ச்சாவதாரத்தை அருளிச்செய்தவர்,
  அதனை விட்டு, இங்கே அவதாரங்களில் வருவான் என்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘அர்ச்சாவதாரத்தில்’ என்று தொடங்கி. தம்
  அபேக்ஷிதமாவன, குளிர நோக்குதல், அணைத்தல் முதலானவை.
  ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘விபவம்’ என்று தொடங்கி.

2. ‘இழவு தீர்க்கிற இடம். . .இருக்க’ என்றது, அவதாரங்களில் பிற்பட்டார்க்கும்
  அநுபவிக்கலாம்படி எப்பொழுதும் அண்மையிலிருப்பவனாயிருக்கிற என்றபடி.

3. ‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பம் குலையும்படி’ என்ற இவ்விடத்திலே,
  “கூரத்தாழ்வான் ஆர்த்தராய்ச் சரணம் புக, பெருமாளும் இரங்கி ‘மூன்றாம்
  நாளைக்கு வீடு தந்தோம்’ என்ன, ‘ஆழ்வான் திருமதிளுக்குப் புறம்பானார்’
  என்னக் கேட்டு உடையவர் ஓடிச்சென்று, ‘ஆழ்வான் நாம் இங்கே இருக்க
  உமக்குப் பரமபதத்தே போக வேண்டிற்றோ’ என்ன, அடியேன்
  சம்சாரத்திலே அடிக்கொதிப்பாலே மறந்தேன்’ என்ன, ‘ஆகில் நாமும்
  சரணம் புக்கால் இன்னம் சிலநாள் ஆழ்வானை இங்கே வைக்க இரங்குவர்’
  என்று திருவாசலளவும் சென்று, ‘சத்திய சங்கல்பனுடைய சங்கல்பத்தைக்
  குலைக்க வேண்டா’ என்று மீண்டு எழுந்தருளினார்” என்ற சரிதம்
  அநுசந்திக்கத் தகும். என்றது, நான் ஒருவன் தோன்றிப் பெருமாளை
  இரண்டு வார்த்தை சொல்லுவாராகச் செய்யலாமோ என்றபடி. ‘அதி
  நிர்ப்பந்தம் செய்யக்கடவோம் அல்லோம்’ என்கையாலே, நிர்ப்பந்தித்தால்
  செய்வர் என்பது கருத்து.