பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
430

என

என்று, 1“அந்தக் கிருஷ்ணனும் துவஜம், வஜ்ஜிரம், தாமரை என்னும் இந்த ரேகைகளை அடையாளமாகவுடைய கைகளாலே நன்றாகத் தொட்டு இழுத்து அன்போடு கெட்டியாக ஆலிங்கனம் செய்துகொண்டார்” என்னும் கிருஷ்ணாவதாரத்திலே போந்தார் அண்மைக் காலமாகையாலே.

    2‘இவ்வாழ்வார்கள் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டியிருப்பர்கள், இதற்குக் காரணம் என்’ என்று பட்டரைக் கேட்க, ‘ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாள்கள் கழிந்தால் பொறுக்கலாம், அணித்தானால் ஆறியிருக்கப் போகாதே அன்றோ; அப்படியே, அல்லாத அவதாரங்களைப் போல அன்றிக்கே, சம காலமாகையாலே, ‘ஒரு செவ்வாய்க்கிழமை முற்படப் பெற்றிலோம், பாவியேம்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே’ என்னும் இழவாலே வயிறு எரிதலாலேயாயிருக்கும்’ என்று அருளிச்செய்தார். 3இனித்தான், இராமவதாரத்தில், தமப்பன் சம்பரனைக் கொன்றவனாய் ஏகவீரனாய் இருப்பான் ஒருவன்; பிள்ளைகள்தாம் ஆண்புலிகள், குடிதானே வன்னியம் அறுத்திருப்பதொரு குடி; இவை எல்லாம் மிகையாம்படி, குணத்தாலே நாடுகளையெல்லாம் ஒருமார்வு எழுத்தாக்கிக்கொண்டிருப்பர்கள், ஆகையால் எதிரிகள் என்கிற சொல்லும் இல்லை; இங்கு அங்ஙன்

_____________________________________________________

1. “ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜ க்ருத சிஹ்நேந பாணிநா
   ஸம்ஸ்ப்ருஸ்ய ஆக்ருஷ்யச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே”

  என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 18 : 2.

2. அண்மைக் காலமாகையாலே என்றதனைப் பெரியோர்களுடைய
  வார்த்தைகள் மூலமாக விவரிக்கிறார் ‘இவ்வாழ்வார்கள்’ என்று தொடங்கி.
  ‘பட்டரைக் கேட்க’ என்றது, பட்டரை நஞ்சீயர் கேட்க என்றபடி.
  செவ்வாய்க்கிழமை-செவ்வாயினுடைய சாரம்.

3. அண்மைக் காலமாத்திரம் அன்றிக்கே, பரிய வேண்டும் காரணங்கள்
  இருந்தனவாகையாலும் கிருஷ்ணாவதாரத்திலே போந்தார்கள் என்று
  அருளிச்செய்கிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி. வன்னியம் - குறும்பரான
  பகைவர்கள். ‘ஒரு மார்வெழுத்தாக்கிக்கொண்டிருப்பர்கள்’ என்றது,
  எல்லாரையும் அடிமையாக்கிக்கொண்டிருப்பார்கள் என்றபடி. ‘ஒரு
  மார்வெழுத்து’ என்றது, மார்வெல்லாம் ஓரெழுத்தாக என்றபடி. ‘ரக்ஷகர்’
 
என்றது, நம்பி மூத்தபிரானை.