பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
431

அன

அன்றிக்கே, தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம்சன் சிறைக்கூடத்திலே, வளர்ந்ததும் அவனகத்து அருகே; ஸ்ரீ பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகளகப்பட அசுர மயமாயிருக்கும்; ரக்ஷகரானவர்கள் ஓர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படியாயிற்று இவன்தன் படிகள் இருப்பன; அப்படியானால் வயிறு எரியாதே செய்வது என் இவர்கள்; 1அக்காலத்திலே உணர்ந்து நோக்கப் பெற்றிலர்கள், அவ்விழாவுக்கு இன்று இருந்து நோவு படுகிறார்கள். 2அவர்களிலே ஒருவரான இவர் சொல்லுகிறபடியன்றோ இது, ‘தெரிந்துணர்வு’ என்ற திருப்பாசுரம்; 3மாயாமிருகத்தின் பின்னே சென்று இளைத்து மீண்டு எழுந்தருளின போது அடிசுட்டுப் பொறுக்கமாட்டாமையாலே தழைகளை முறித்துப்பொகட்டு அவற்றிலே நின்று ஆறி எழுந்தருளினார் என்று கேட்டு, ‘பாவியேன்! அன்று உதவி அத்திருவடிகளிலே என் தலையை மடுக்கப்பெற்றிலேன், ஒரு பயனுமின்றியே கழிந்தனவேயன்றோ அநாதி காலம் எல்லாம் என்று நொந்தாரன்றோ. இப்படியன்றோ கழிந்தனவற்றிற்கு

____________________________________________________

1. இவையெல்லாம் முற்காலத்தில் நடந்தனவேயன்றோ, அவற்றிற்கு இப்போது
  நோவு படுகிறது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அக்காலத்திலே’ என்று தொடங்கி.

2. முன் நடந்தனவற்றைக் குறித்து அப்படி நோவு பட்டார்களோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவர்களிலே’ என்று தொடங்கி.
  தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா

  இருந்தொழிந்தேன் கீழ்நாள்க ளெல்லாம் - கரந்துருவின்
  அம்மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழியங்கை
  அம்மானை ஏத்தாது அயர்த்து.

  என்பது, பெரிய திருவந்தாதி. 82.

3. பாசுரத்திற்குப் பாவம் அருளிச்செய்கிறார் ‘மாயா மிருகத்தின்’ என்று
  தொடங்கி. மாயாமிருகம் - மாரீசனாகிய மாயமான்.

  புலையாம் பிறவிபிறந் தென்செய்தோம் பொன்னி பொன் கொழிக்கும்
  அலையார் திருவரங்கத் தெம்பிரான் நம தன்னையொடும்
  தொலையாத கானம் கடந்த அந்நாள் தடந்தோறும் புல்லாய்ச்
  சிலையாய்க் கிடந்திலமே நெஞ்சமே கழல் தீண்டுகைக்கே.

 
என்னும் திருப்பாசுரம் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.