இவர
இவர்கள் வயிறு எரியும்படி.
1‘திருநீல மணியார் மேனியோடு என்மனம் சூழ வருவாரே’ என்றும் வயிறு பிடித்தாரன்றோ
இவர்.
2‘இவர்
அவனுடைய அவதாரங்களையும் உலகைப்படைத்தல் முதலான வியாபாரங்களையும், “தாயர் மகிழ ஒன்னார்
தளரத் தளர் நடை நடந்த” என்கிறபடியே, அடியார்களை வாழ்விக்கவும், பகைவர்களை அழியச் செய்யவும்
அடியிட்டு அப்படி வளர்ந்தருளின கிருஷ்ணாவதாரத்தையும் அநுசந்தித்து மிகவும் சிதிலரான இவர், தரித்து
நின்று உன்னை அநுசந்திக்க வல்லேனாம்படி செய்தருள வேணும் என்று அவனைச் சரணம் புகுகிறார்” என்று
3ஆழ்வான் பணிக்கும். அன்றியே, ‘பிரிந்திருக்கும் சமயத்திலே உன் குணங்கள்
மனத்திலே நிலைபெற்று மிகவும் நலிய, அதனாலே நெருக்குண்டு நோவுபடுகை தவிர்ந்து, உன் திருவடிகளிலே
வந்து சேர்ந்து உன்னைக்கிட்டி அநுபவிக்கும்படி செய்தருள வேண்டுமென்று அவனைக் குறித்து அருளிச்செய்கிறார்’
என்று எம்பார் அருளிச்செய்வர். அங்ஙனம் அன்றிக்கே, “சர்வேச்வரன்
_____________________________________________________
1. “தணியா வெந்நோய்
உலகில் தவிர்ப்பான் திருநீல
மணியார் மேனியோடு என்மனம்
சூழ வருவாரே.”
என்பது, திருவாய். 8. 3 : 6.
2. பிராசங்கிகங்களை (இடைப்பிறவரல்) அருளிச்செய்து, இனி,
இத்திருவாய்மொழிக்குள்ள மூன்று வகையான நிர்வாகங்களை
அருளிச்செய்வதாகத் திருவுள்ளம் பற்றி, முந்தற இத்திருவாய்மொழியில்
கூறப்படும் பொருள்களையெல்லாம்
திரட்டி, ஆழ்வான் நிர்வாகத்தை
அருளிச்செய்கிறார் ‘இவர் அவனுடைய’ என்று தொடங்கி. இத்திருவாய்
மொழியில் வருகின்ற “கொப்பூழ்ச் செந்தாமரைமேல்” என்பது
போன்றவைகளைக் கடாக்ஷித்து
‘உலகைப் படைத்தல்’ என்று
தொடங்கியும், “வதுவை வார்த்தையுள்” என்பது போன்றவைகளைக்
கடாக்ஷித்து
‘அடியார்களை’ என்று தொடங்கியும், “நாகணைமிசை”
என்பது போன்றவைகளைத் திருவுள்ளம்பற்றிச்
‘சரணம் புகுகிறார்’
என்றும் அருளிச்செய்கிறார்.
“தாயர்மகிழ” என்பது, பெரியாழ்வார்
திருமொழி, 1. 7 : 11.
3. “நின்றுநின்று
நினைகின்றேன்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
எழுகின்றது ஆழ்வான் நிர்வாகம். எம்பார் நிர்வாகம்,
“என் கண்கட்குத்
திண்கொள்ள” என்பது போன்றவைகளிலே நோக்காக எழுந்தது. “செய்து
போன மாயங்களும்”
என்றதிலே நோக்கு, பிள்ளான் நிர்வாகம்.
|