| க 
கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்துத் திருவாய்ப்பாடியிலே 
வளர்ந்தருளாநின்றான்’ என்று கேட்டு, ‘அங்கே மநோரதித்தபடியே நாம் கலந்து பரிமாறலாம்’ என்று 
தெற்குத் திருவாசலாலே சென்று புக, ‘இப்போது இங்ஙனே வடக்குத் திருவாசலாலே புறப்பட்டுத் தன்னுடைச் 
சோதியேற எழுந்தருளினான்’ என்று கேட்டு விழுந்து கிடந்து கூப்பிடுகிறார்” என்று பிள்ளான்
பணிப்பர் என்று அருளிச்செய்வர்.  
542 
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் 
கை செய்து ஐவர்க்குத்திறங்கள் காட்டியிட்டுச் செய்துபோன மாயங்களும்
 நிறந்த னூடு புக்கென தாவியை நின்றுநின்று ருக்கிஉண் 
கின்றஇச்
 சிறந்த வான்சுடரே! உனைஎன்றுகொல் சேர்வதுவே?
 
 பொ-ரை :- 
பிறந்த விதமும் வளர்ந்த விதமும் மஹாபாரதயுத்தத்திலே அணிகளை வகுத்துப் பாண்டவர்கட்குப் 
பல திறங்களையும் காட்டிக் காரியங்களைச் செய்து தன்னுடைச்சோதிக்கு எழுந்தருளிய ஆச்சரியமான 
காரியங்களும் மார்பினுள்ளே நுழைந்து என்னுடைய உயிரை உருக்கி நின்று நின்று உண்கின்றன; இந்தச் 
சிறந்த வான் சுடரே! உன்னையடைவது என்றுகொல்?
 
 வி-கு :- கைசெய்து-அணி வகுத்து. காட்டியிட்டு: 
ஒருசொல், ஆறும் ஆறும் மாயங்களும் புக்கு நின்று நின்று உருக்கி உண்கின்ற என்க. நின்று நின்று: 
அடுக்குத்தொடர். உண்கின்ற: முற்று. உண்கின்ற சுடரே என எச்சமாகக் கோடலுமாம்.
 
 இத்திருவாய்மொழி ஆசிரியத்துறை.
 
 ஈடு :- முதற்பாட்டு. 1இத்திருவாய்மொழியில் 
சொல்லப்படுகின்ற அர்த்தத்தைச் சுருக்கமாக அருளிச்செய்யா நின்று கொண்டு; உன்னுடைய அவதாரம் 
முதலானவைகள் என்னை மர்மத்திலே தொட்டு நைவிக்
 
_____________________________________________________ 
1. பாசுர முழுதினையும் 
கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். |