பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
434

கின்றன. இந்த நையுந்தன்மை நீங்கி உன்னைத் தரித்து நின்று நான் அநுசந்திப்பது எப்போது? என்கிறார்.

    பிறந்தவாறும் 1தாய் தந்தையர்கட்குக் காற்கட்டு அறும்படியன்றோ பிறந்தது. 2தன்னைப் பெற்றவர்களுடைய பந்தத்தை அறுத்துக்கொண்டு வந்து பிறப்பாரும் உளரோ. 3‘இவன் அன்றோ நமக்குக் காற்கட்டு ஆனான்’ என்றிருந்தார்கள் அவர்கள்; அது பொறுக்கமாட்டாமல், ‘உங்களுடைய கட்டு நான் பொறுக்கமாட்டேன்’ என்று விட்டான். 4தந்தை காலில் விலங்கு அற அன்றோ வந்து தோன்றிற்று, பிறக்கிற போதே தாய் தந்தையர்கள் காலில் கிரந்தியை அறுத்துக்கொண்டு காணும் பிறந்தது. பிறந்தவாறும் - 5பிள்ளாய்! பிறக்கிறபோதும் ஒரு விளக்கு எரிந்தால் ஆகாதோ, 6தானே விளக்காக அன்றோ பிறந்தது. 7ஆயர்

____________________________________________________

 

1. மேன்மை தோற்ற வந்து பிறந்தான் என்கிறார் ‘தாய்தந்தையர்கள்’ என்று
  தொடங்கி.

2. மேன்மை தோற்ற வந்து பிறக்கையாலே ஈடுபாட்டுக்குக் காரணமாக
  அருளிச்செய்கிறார் ‘தன்னைப் பெற்றவர்களுடைய’ என்று தொடங்கி. இது,
  “பிறந்தவாறும்” என்கிறவருடைய மனோபாவம். என்றது, எல்லாரும்
  தங்களைப் பெற்றவர்களுக்குப் பாசத்தை உண்டாக்குவார்களே ஒழிய,
  பாசத்தை அறுத்துக்கொண்டு வந்துபிறப்பார் உளரோ என்றபடி.

3. ‘தாய்தந்தையர்கட்கு’ என்று தொடங்கி முன்னைய வாக்கியத்தை
  விவரணம் செய்கிறார்: ‘இவன் அன்றோ’ என்று தொடங்கி.

4. தாய்தந்தையர்களுடைய காற்கட்டு அறும்படி வந்து தோன்றினானோ?
  என்ன, ‘தந்தை காலில்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். இது, பெரிய திருமொழி 8. 5 : 1. எடுத்த பாசுரத்திற்கு
  ரசோக்தியாக, பாவம் அருளிச்செய்கிறார் ‘பிறக்கிற போதே’ என்று
  தொடங்கி. கிரந்தி-முடிச்சு.

 

5. நீர்மையும் தோற்றப் பிறந்தான் என்கிறார் ‘பிள்ளாய்’ என்று தொடங்கி.
  ‘பிள்ளாய்’ என்றது, வார்த்தைப்பாடு. ஈடுபாட்டிலே.

6. வேறு ஒரு விளக்கு இல்லையோ? என்ன, ‘தானே’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார்.

7. அவன் விளக்கு என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘ஆயர் குலத்தினில்’
  என்று தொடங்கி. இது, திருப்பாவை பாசு. 5.