| New Page 1 
குலத்தினில் தோன்று மணி விளக்கன்றோ. பிறந்தவாறும்-1கர்மங்கட்குக் 
கட்டுப்படாதவனான தான் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவரோடு ஒக்கப் பிறப்பது, பிறந்தால் அடியார்களைப் 
பாதுகாத்தலே தனக்குப் பிரயோஜனமாக இருப்பது, அவர்கள் ஆபத்துப் படுங்காலமே தனக்குப் பிறக்கைக்கும் 
காலமாவது, பிறவாநின்றால் தன் ஐச்வர்யத்தில் ஒன்றும் குறையாமற்பிறப்பது, பிரகிருதி சம்பந்தமில்லாத 
திருமேனியை இதர சஜாதீயமாக்கா நிற்பது, தன் பிறப்பை அநுசந்தித்தாருடைய பிறவிகள் போகும்படியாக 
இருப்பது, இவையெல்லாவற்றையும் நினைக்கிறது. 2‘நமக்காக இவர்கள் பிணைபட்டுச் 
சிறையிருக்கும்படி இவர்களுக்கு இங்ஙனே பிறப்பதே!’ என்று ஈடுபடாநிற்பனவான படிகளையெல்லாம் நினைக்கிறது. 
பிறந்தவாறும் - 3“ஆவிர்பூதம்” - தோன்றுதல் என்றதனைக்கொண்டு, தோன்றினவாறும் 
என்னாதொழிவான் என்? என்னில், சம்சாரிகள் பத்து மாதங்கள் கருவிலே தங்கியிருப்பார்களேயாகில்
4“பிறகு பன்னிரண்டாவது மாதமான சித்திரை மாதத்தில் நவமி 
___________________________________________________ 
1. பிறந்ததும் என்னாமல், “ஆறும்” 
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்‘கர்மங்கட்கு’ என்று தொடங்கி.
 
 2. தாய்தந்தையர்களுடைய காற்கட்டினைப் பொறுக்க 
மாட்டாமல் அவன்
 நெஞ்சு நொந்திருக்கும் பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘நமக்காக’ என்று
 தொடங்கி. 
இந்த வாக்கியத்தை, ‘நான் பொறுக்க மாட்டேன் என்று
 விட்டான்’ என்று மேலே கூறிய வாக்கியத்திற்குப் 
பின்னே கூட்டிப்
 பொருள் முடிவு காணல் தகும்.
 
 3. “ஆவிர்பூதம்” என்றதனைக் கொண்டு’ என்றது, 
‘ஆவிர்பூதம்’ என்று
 மஹருஷி சொன்னாற்போலே என்றபடி. (விஷ்ணுபுரா. 5 : 3.)
 ‘தோன்றினவாறும் 
என்னாது ஒழிவான் என்?’ என்றதன்பின், இல்லாத
 பிறவியை இட்டு குணத்தை அவன்மேல் ஏறிட்டிக் 
கூறலாமோ என்ற
 வாக்கியம் எஞ்சி நிற்கிறது. ‘சம்சாரிகள்’ என்று தொடங்கி, அதற்கு விடை
 அருளிச்செய்கிறார். மஹருஷி, “ஆவிர்பூதம்” என்றது, அவதாரம் இச்சை
 காரணமாக என்கைக்காக; 
இவர், “பிறந்தவாறும்” என்றது, அவதாரத்தில்
 மெய்ப்பாட்டுக்காக என்க.
 
 4. “ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே 
திதௌ”என்பது, ஸ்ரீராமா.
 பால. 18 : 8.
 
 “பன்னிரு திங்கள் வயிற்றில்கொண்ட வப்பாங்கினால்
 என் இளங்கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்”
 
 என்பது, பெரியாழ்வார் திருமொழி. 3. 2 : 8.
 |