|
யன
யன்றோ இருப்பது. பிறக்கிறபோது
சிறைக்கூடத்திலே தான் பிறந்தால், வளருகிறபோது நாட்டாரைப் போன்று வளரத்தான் பெற்றதோ.
வளர்ந்தவாறும் - 1பூதனை முதலாயினோர்கள் உயிர்கள் மாளவும், யசோதை முதலானவர்களுடைய
சிநேகம் வளரவுமன்றோ வளர்ந்தது. “தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர் நடை நடந்து” என்கிறபடியே,
2மிடறுமெழு மெழுத்தோடே வெண்ணெய் விழுங்கிப் போய்ப் படிறு பல செய்து இப்பாடி எங்கும்
திரிய அன்றோ அவர்கள் உகந்திருப்பது. வளர்ந்தவாறும் - 3இவன் கால் நெடுக நெடுக,
பகைவர் உடலும் மாண்டது, அநுகூலர் உடலும் மாண்டது; 4‘பொட்டத் துற்றி’ என்றும்,
‘வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு’ என்றும் அநுகூலர் உடல் அன்றோ மாண்டது.
இப்படிப் பகைவர் மண்ணுண்ணவும், தான் நெய்யுண்ணவும், அநுகூலர் கண்ணுண்ணவுமன்றோ வளர்ந்தருளிற்று.
பெரிய பாரதம் -
‘மஹா பாரதம்’ என்றன்றோ பிரசித்தி. கைசெய்து - கையும் அணியுமாக வகுக்கை
____________________________________________________
ஈடுபடுகிற ஆழ்வாருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார்
‘பிறக்கிறபோது’ என்று தொடங்கி.
1. வளர்ந்ததும் என்னாமல்,
“வளர்ந்தவாறும்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பூதனை’ என்று தொடங்கி. அதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘தாயர்’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திருமொழி,
1. 7 : 11.
2. தீம்புகளாலே தாய்க்குச்
சிநேகம் வளருமாற்றினைக் காட்டுகிறார் ‘மிடறு
மெழு’ என்று தொடங்கி.
மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய்
விழுங்கிப்போய்ப்
படிறு பலசெய்து இப்பாடி யெங்கும்
திரியாமே
கடிறு பலதிரி கானதரிடைக்
கன்றின்பின்
இடற என்பிள்ளையைப்
போக்கினேன் எல்லே பாவமே!
என்பது, பெரியாழ்வார் திருமொழி.
3. ரசோக்தியாக அருளிச்செய்கிறார்
‘இவன் கால்’ என்று தொடங்கி.
உடல்-சரீரமும், உற்பத்தியும், செல்வமும். மாண்டது - இறந்தது,
மாட்சிமைப்பட்டது.
4. பிரதிகூலர் உடல் மாண்டதற்குப்
பிரமாணம் காட்டுகிறார் ‘பொட்டத்
துற்றி’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திருமொழி,
3. 5 : 1.
“வெண்ணெய்
விழுங்கி” என்பது, பெரியாழ்வார் திருமொழி, 2. 9 : 1.
|