பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
484

ஸ்ரீ

வியாக்கியானத்தில் வந்துள்ள - ஐதிஹ்யங்கள்

    ‘மித்ரபாவேந’ என்கிற சுலோகத்திலே எம்பார், ‘சர்வஜ்ஞனுக்கு ஒரு அஜ்ஞானமும் மறதியும், சர்வ சக்திக்கு ஒரு அசக்தியும் உண்டு’ என்று அருளிச்செய்வர்.

பக். 8.


    “இராவணன் மாயா சிரசைக் காட்டினபோது, மற்றைய பெண்கள் மனத்தோடு படாமலே அழுமாறு போன்று, தன் ஆற்றாமையாலே கூப்பிட்டு, சத்தையோடே இருந்தாள், இவ்வார்த்தை கேட்டபோதே முடியாதிருப்பான் என்?” என்று பட்டரைச் சிலர் கேட்க, ‘ஜீவனத்திற்கும் முடிதலுக்கும் நிமித்தம், ஞான அஜ்ஞானங்கள் அல்ல; அத்தலையில் சத்தையும் அது இல்லாமையுமாயிற்று; அதற்கு அழிவில்லாமையாலே இருந்தாள்’ என்று அருளிச்செய்தார்.

பக். 81.


    ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் வலையாக அபிநயித்துப் பாடாநிற்க, எம்பெருமானார் திருக்கண்களைக் காட்டியருளினார்.

பக். 130.


    இத்திருவாய்மொழியை ஆழ்வான், இராஜேந்திரசோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக்கொண்டிருக்க, ‘ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று ‘ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப்பெறுமோ’ என்ன, ‘பெறும் சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் “தலையாலே தொழுதலையும் செய்வாய்” என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச்செய்தார்.

பக். 132, 133.


   
அனந்தாழ்வான் பணித்தாராக நஞ்சீயர் வந்து பட்டரிடத்தில் “வில்லைக் கொண்டு வா, ஆசீவிஷத்திற்கு ஒத்த