பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
485

பாணங்களையும் கொண்டு வா’ என்றபோது கடல் கீழ் மண் கொண்டு மேல்மண் எறிந்தாற்போலேயாயிற்று, இவள் ‘மடல் ஊர்வன்’ என்ற துணிவைக் கேட்டு அவன் தன் சர்வாதிகத்வம் கலங்கினபடி” என்று அருளிச்செய்தார்.

பக். 150.


    கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்துகொள்வேமோ’ என்று ஆராய்ந்து, ‘இதுதான் கிரமத்திலே வந்து ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக்கட்டும்; இனித்தான், “பிரஹ்மசாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப்பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்கவேண்டும்; ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள் கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லாநின்றது; இந்தச் சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து ‘அந்தச் சாமான்ய தர்மத்திற்காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.

பக். 210.


    ஆண்டாள், ஒருநாள் பட்டரையும் சீராமப்பிள்ளையையும் காட்டி, ‘இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தை அடைந்தார்கள், பேசாதே இருக்கிறது என்?’ என்ன, ‘ஆகில், நாளைப் பெருமாள்பாடே போனவாறே வரக்காட்டு’ என்ன, அவர்களையும் கொண்டு திருமுன்பே நிற்கச் செய்தே, பெருமாள் அருளப்பாடிட்டு, ‘ஒன்று சொல்வாய் போலே இருந்தாயே!’ என்று திருவுள்ளமாக, “இவர்கள் விவாகத்தைச் செய்வதற்குரிய பருவத்தினர் ஆனார்கள் என்று சொல்லாநின்றார்கள்” என்ன, ‘நாமே ஒத்ததான இடத்தில் சம்பந்தம் செய்து தருகிறோம்’ என்று அருளிச்செய்ய, பிற்றைநாள் மன்னியைக் கொடுவந்து நீர் வார்த்தார்கள். ஆக, ‘அத்தலையாலே வருமது ஒழிய, தாம் தாம் ஒன்றை ஆசைப்படுகையும் கூடப் பழி’ என்று இருக்குங்குடிகாணும்.

பக். 228, 229.


   
ஒருநாள், சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே பிள்ளானைக் கண்டு, ‘ஈச்வரனுக்கு ஸ்வரூப வியாப்தியேயோ உள்ளது, விக்ரஹ வியாப்தியும் உண்டோ?” என்று கேட்க, ‘சர்வவிஷயமாக ஸ்வரூப வியாப்தியே உள்ளது; உபாசக விஷயத்தில், அவர்கள் பக்கல் அநுக்ர