பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
486

ஹத

ஹத்தாலே, அவர்கள் பற்றுக்கோடாகப் பாவித்த விக்ரஹத்தோடே எழுந்தருளியிருக்கும்; இனி, ஸ்வரூபவியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமான்ய விஷயமாகிறது, விக்கிரஹ வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் விசேஷ விஷயமாகிறது’ என்று பணித்தானாம்.

பக். 233, 234.


    பட்டர், ஸ்ரீ புஷ்பயாகம் அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்; ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப்பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச்செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல் சொல்லி, ‘இயமம், நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்து அநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தரர்மிகராயிருப்பார் இவை சில ஈரச் சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச்செய்தார்; நஞ்சீயர், இவ்வார்த்தையை உருத்தோறும் அருளிச்செய்வர்” என்று அருளிச்செய்வர்.

பக். 310, 311.


    ஆப்பான் திருவழுந்தூர் அறையர் கையிலே தாளத்தை வாங்கி, ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே பாடுவராம்.

பக். 312.


    வடதேசத்திலே லோக சாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல, ‘பிள்ளாய்! தென் தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன, ‘அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன, “ஆராவமுதே” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன, ‘நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே!’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், ‘இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப் போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

பக். 332, 333.


   
‘இதுதான் நான் அநுபவித்தேன்’ என்று சீயர் அருளிச்செய்வர். பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்துப்