பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
487

பின்பு ஒருகால் மேல்நாட்டுக்கு எழுந்தருளி மீண்டு பெரிய விரைவோடே ‘திருநாளுக்கு உதவவேணும்’ என்று வர, திருக்கரம்பன் துறையளவிலே வந்தவாறே நினைவின்றிக்கே காவிரி பெருகிக் கிடக்க; இராத் திருநாள் எழுந்தருளி இங்குண்டான சம்பிரமங்களெல்லாம் செவிப்படுவது, வந்து புகுரப் பெறாதொழிவதாய்க்கொண்டு ‘போரநோவு பட்டோம்’ என்று அருளிச்செய்வர்.

பக். 379.


    ஜனநாதப் பிரஹ்மராயர் திருமுடிக்குறையிலே ஒரு மரம் வெட்டப்புக, அதனை எம்பார் கேட்டு ‘அல்லாளப் பெருமாளே! ஈச்வர விபூதியை அழிக்கப் பார்த்தாயோ’ என்ன, இவர் சொல்லும் வார்த்தையைக் கேட்கைக்காக, ‘ஈச்வர விபூதி அல்லாத இடம் உண்டோ’ என்ன, ‘அவை போல் அல்ல காண் இவை; சார்வபௌமனான ராஜாவும் தேவியுமாக முற்றூட்டாகக் குடநீர் வார்த்து ஆக்கும் சோலை போலே, பெருமாளும் பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவைகாண்’ என்று அருளிச்செய்தார்.

பக். 387.


    நல்லான், பட்டர் திருவடிகளை ஆஸ்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்பு மரணதசையிலே பட்டர் எழுந்தருளி, ‘என் நினைத்திருந்தாய்’ என்ன, “சர்வ சக்தி உபகரிக்கும்போது ‘இங்ஙனம் கனக்கவாகாதே உபகரிப்பது’ என்று நினைத்திருந்தேன்” என்ன, ‘அது என், உன் தேசத்தைவிட்டு உறவினர்களை விட்டு நெடுந்தூரம் போந்து இங்ஙனம் நோவுபட்டுத் திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?’ என்ன, ‘வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்து போகக் கடவ என்னை இவ்வளவும் அழைப்பித்து, உம்முடைய திருவடிகளை அடையச்செய்து ருசியை விளைப்பித்து, இத்தேசத்திலே உம்முடைய கண்வட்டத்திலே சரீரம் நீங்கும்படி செய்தானே’ என்ன, ‘ஆனாலும், தானாக அபிமானித்த சரீரம் போகாநிற்க, நீ இங்ஙனம் நினைத்திருந்தது என்கொண்டு?’ என்ன, ‘பிரமாணம் கொண்டு நினைத்திருந்தேன்’ என்றான்.

பக். 388.


   
ஆழ்வார்கள் கிருஷ்ணாவதாரத்திலே போரமண்டியிருப்பதற்குப் பட்டர் அருளிச்செய்த சமாதானம்.

பக். 430.