|
இ
இருக்குமேயன்றோ?
“கூரார் ஆழி வெண்சங்கு ஏந்தி வாராய்” என்று அநுகூலர்க்கு ஆசைப்படுகைக்கு உடலாய், விரோதிகளைத்
துணிக்கைக்கும் உடலாய் ஆயிற்று இருப்பது. 1‘சக்கரத்து’ என்றவிடத்து ‘அத்து’ என்பது,
சாரியை இடைச்சொல். மேல் வரும் இடங்களில் எல்லாம் இப்படியே கண்டுகொள்வது. என் கரு மாணிக்கமே
- சிரமஹரமாய் நீல இரத்தினம்போலே பெருவிலையனான வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!
2கையுந் திருவாழியுமான அழகை நினைத்தால் அடைவே ஸ்ரீ பாஞ்சஜன்யத்தை நினைக்கவல்லர் அல்லரே,
பின்னர் வடிவழகிலே கால்தாழ்ந்தார், 3படி கடந்து அவ்வருகு போமவர் அல்லரே. என்று
என்று - இதனை ஒருகால் சொல்லித்தான் விட்டேனோ. 4பகவத் விஷயத்தில் உட்புக்கது
எல்லாம் குற்றமாய்த் தோற்றுகிறதாயிற்று; ‘போராது’ என்று இருக்கையாலே. இது பொல்லாததாய்
இருந்தது இல்லையே! என்ன, அழகேயன்றோ, பாவபந்தத்தோடு சொன்னேனாகில். பொய்யே கைம்மை
சொல்லி - பொய் என்பதும், கைம்மை என்பதும் ஒருபொருட்சொற்கள். ‘இதனால் என் சொல்லியவாறோ?’
எனின், பிறரை வஞ்சித்தல் அன்றிக்கே, முற்றறிவினனான சர்வேச்வரனும் ‘இது மெய்’ என்று
பிரமிக்கும்படி பெரும்பொய்யை அன்றோ சொல்லிற்று என்றபடி. பொய்யும் மெய்யுமாகக் கலந்துதான்
_______________________________________________
கையும், போரும். படை என்பதும்,
சிலேடை: ஆபரணமும், சேனையும்,
ஆயுதமும். திருவாழி, ஆபரணமுமாய் ஆயுதமுமாய் இருப்பதற்கு
மேற்கோள்,
“கூரார்” என்று தொடங்கும் பாசுரம். இது, திருவாய் மொழி.
6. 9 : 1.
1. “மஃகான்
புள்ளிமுன் அத்தே சாரியை” என்பது, தொல்காப்பியம்.
2. ‘திருவாழியாழ்வானைக் கூறியபின், ஸ்ரீ பாஞ்ச ஜன்னியத்தைக் கூறாது
ஒழிந்தது என்?’ என்ன. அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘கையும்
திருவாழியுமான’ என்று தொடங்கி. என்றது, “சக்கரத் தண்ணலே”
என்றால்,
கால் தாழுமவர் ஆகையாலே என்றபடி.
3. ‘படி’ என்றது,
சிலேடை: திருமேனியும், வாசற்படியும்.
4. பகவானைப் பலகாலும்
சொல்லுவது நல்லது அன்றோ? அப்படியிருக்க,
‘இதனை ஒருகால் சொல்லித்தான் விட்டேனோ?’ என்பது
என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பகவத் விஷயத்தில்’ என்று தொடங்கி.
‘போராது’ என்றது, ‘அன்பு போராது’ என்றபடி.
|