|
New Page 1
சொன்னேனோ என்பார்
‘பொய்யே’ எனப் பிரிநிலை ஏகாரம் கொடுத்து ஓதுகிறார்.
புறமே புறமே ஆடி - இப்போது ‘புறம்’ என்கிறது, ஐம்புல இன்பங்களை. 1‘பகவத் விஷயத்தில் இறங்கியது
போராது’ என்று இதனைப் ‘பொய்’ என்னாநிற்கச் செய்தேயும், ஐம்புல இன்பங்கள் புறம்பாய்த் தோற்றுகின்றன
ஆயிற்று இவர்க்கு; “பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ” என்னுமவரேயன்றோ? 2ஜாதி,
உருவங்கள் தோறும் நிறைந்து இருக்குமாறுபோலே ஆயிற்று விஷயங்கள்தோறும் தனித்தனியே கால் தாழ்ந்தபடி.
3இதுதான் எப்பொழுதை நிலையைப் பற்றச் சொல்லுகிறார்? என்னில், முக்காலத்தில்
உள்ளவையும் சம காலத்தில் போலே தோற்றுகையாலே சென்ற பிறவிகளில் நிகழ்ந்தனவற்றை நோக்கிச்
சொல்லுகிறார் என்னவுமாம்; மயர்வு அற மதிநலம் பெற்ற பின்பும் தமக்கு விஷயத்திற்குத் தகுதியாகப்
போராமையாலே சொல்லுகிறார் ஆகவுமாம். ‘உம்முடைய நிலை இதுவாகில் பேறு இருந்தபடி என்?’ என்ன,
அருளிச்செய்கிறார் மேல்:
மெய்யே - என்பக்கல்
உள்ளவை பொய்யே ஆயினாற் போலே, அவன் அடியாக வந்தது ஆகையாலே மெய்யேயாய் இருக்குமே அன்றோ.
பேற்றில் கண்ணழிவு சொல்லலாவது இல்லை என்றபடி. பெற்றொழிந்தேன் - 4பரம
_______________________________________________
1. பகவத் விஷயத்தில்
இறங்கியது போராது என்று’ என்று தம்முடைய
தோஷத்தைச் சொல்லா நிற்க, “புறமே புறமே” என்பான்
என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பகவத் விஷயத்தில்’ என்று தொடங்கி,
‘இவர்க்கு’ என்றதன் கருத்தை அருளிச்செய்கிறார் ‘பாவியேனை’ என்று
தொடங்கி. இது, திருவாய்.
6. 9 : 9. இங்ஙனம் கூறுதற்குக் காரணம் இவர்தம்
தன்மையே எனக்கொள்க.
2. “புறமே புறமே” என்ற ஏகாரத்தோடு கூடிய அடுக்குத் தொடருக்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘ஜாதி’ என்று தொடங்கி.
3. இதுதான் இப்போது
இல்லையே? என்னுமதனைச் சங்கித்து, அதற்கு இரண்டு
வகையாக விடை அருளிச்செய்கிறார் ‘இதுதான்’
என்று தொடங்கி. ‘இதுதான்’
என்றது, புறமே புறமே ஆடுதலை. ‘போராமையாலே’ என்றது, அன்பு
போராமையாலே
என்றபடி.
4. “பெற்றொழிந்தேன்”
என்பான் என்? பரமபதம் பெறுதல் வேண்டாவோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பரமபதத்து ஏறப்போனாலும்’
என்று தொடங்கி.
|