|
பதத
பதத்து ஏறப்போனாலும்
இப்பேற்றினை அசையிட்டு இருக்குமத்தனை. என்றது, இனி, இதனைக்காட்டிலும் ஏற்றம் செய்யலாவது இல்லை
என்றபடி. 1‘காரணம் இல்லை’ என்னாநின்றீர், பேறு கனத்திருந்தது; இதற்கு அடி என்?
என்ன, விதிவாய்க்கின்று - பகவானுடைய கிருபை கரைபுரளப் பெருகாநின்றால் நம்மாற் செய்யலாவது
உண்டோ? ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை. “கேசவன் தமர்” என்னும் திருவாய்மொழிக்கு
2இப்பால் எல்லாம் இவர், ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை.
3கிருபையை ‘விதி’ என்பதற்கு அடி, அவனால் தப்ப ஒண்ணாதபடி இருக்கையாலே. வாய்க்கின்று
- பகவானுடைய கிருபை ஈச்வரனுடைய ஸ்வாதந்திரியமாகிய கரைபுரளப் பெருகி வந்து கிட்டுமிடத்தில்.
காப்பார் ஆர் - இதனைத் தடை செய்வார் ஆவார் உளரோ? 4இரண்டு சேதநராலும் தடை
செய்யப்போகாது என்பார் ‘காப்பது எது?’ என்னாமல், ‘காப்பார் ஆர்?’ என்கிறார்.
என்றது, பரதந்திரனான இவனாலும் தகைய ஒண்ணாது, ஸ்வதந்திரனான அவனாலும் தகைய ஒண்ணாது; பலத்தை
அநுபவிக்கிற இவனாலும் தகைய ஒண்ணாது, பலத்தைக் கொடுக்கிற அவனாலும் தகைய ஒண்ணாது என்றபடி.
_______________________________________________
1. ‘காரணம் இல்லை’
என்றது, “பொய்யே கைம்மை சொல்லி” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி.
2. ‘இப்பால் எல்லாம்’
என்றது, “என்று மொன்றாகி” என்ற திருப்பாசுரத்தைத்
திருவுள்ளம்பற்றி. இப்பால்-இப்பக்கம்.
3. பகவத்
கிருபையை “விதி” என்றதற்குக் காரணம் என்? என்ன, அதற்குக்
காரணம் அருளிச்செய்கிறார்
‘கிருபையை’ என்று தொடங்கி.
4. “காப்பார் ஆர்?”
என்றதற்கு, இரண்டு வகையாகப் பொருள்
அருளிச்செய்கிறார். கர்மத்தோடு கூடின சேதநராலும்
ஸ்வாதந்திரியத்தையுடைய
ஈச்வரனாலும் தகையப்போகாது என்பது முதற்
பொருள். அதனை அருளிச்செய்கிறார் ‘இரண்டு சேதநராலும்’
என்று
தொடங்கி. ‘பரதந்திரனான’ என்றது, கர்மங்கட்குத் பரதந்திரப் பட்டவனான
என்றபடி. ‘ஸ்வதந்திரனான’
என்றது, கர்மங்கட்குத் தகுதியாகவே
நிர்வஹிக்கக் கடவேன்’ என்னும் ஸ்வதந்திரத்தை யுடைய ஈச்வரனாலும்
என்றபடி. முதற் பொருளுக்குக் கருத்து, அவனுடைய கிருபையை அண்டை
கொண்ட பலத்தால் கூறுகிறார் என்பது.
|