பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
58

தண

தண்ணிய மனம் சிறிதும் வேண்டாம்; கண்ணபிரானைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை; ஆதலால், உங்களால் செய்யப்படுகின்ற நித்திய நைமித்திக கர்மங்கள் எல்லாவற்றையும் சர்வேச்வரனுக்குச் சரீரமாக இருப்பவர்கள் இந்தத் தேவர்கள் என்ற எண்ணத்தோடு அவர்களுக்கு இடுங்கோள் என்கிறார்.

    வி-கு :-
நிறுத்திக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்வது அவனொடே கண்டீர் என்க. ‘அவனொடே’ என்றது, அவன் திருவருளாலேயாகும் என்றபடி. கரி - சான்று. ‘கறுத்த’ என்பது, ஈண்டுக் குற்றத்தைக் காட்டுகின்றது. இறுத்தல் - கொடுத்தல். அவன் மூர்த்தியாயவர் - அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்.

    ஈடு :-
ஏழாம் பாட்டு. 1நாங்கள் பலநாள் தேவதைகளுக்குப் பச்சை இட்டு ஆராதித்துப் போந்தோம்; அதன் முடிவு கண்டு, பின்பு பகவானைப் பற்றுகிறோம் என்ன, நீங்கள் ஆராதிக்கின்ற தேவதைகள் உங்களைக் காப்பாற்றுவதும் அவன் பக்கலிலே கொடு சென்று காட்டிக் கொடுத்தாயிற்று, ஆன பின்பு, 2அவனையே ஆராதிக்கப்பெறில் அழகிது; அதுவும் மாட்டீர்கோளாகில், நீங்கள் அவர்களுக்கு இடுகிறவற்றை ‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக உள்ளவர்கள், இவர்கள் முகத்தாலே நாம் பகவானை ஆராதிக்கிறோம்’ என்று புத்தி பண்ணியாகிலும் இடுதற்குப்  பாருங்கோள் என்கிறார்.

    நிறுத்தி - 3தியானம் செய்தற்குரிய பொருளை நிலைத்திருக்கச் செய்கையும் தியானம் செய்கிறவனுக்கே பாரமா

____________________________________________________

1. “அவனொடே கண்டீர்” என்கையாலே, வினாவும் விடையுமாக
  அருளிச்செய்கிறார் ‘நாங்கள்’ என்று தொடங்கி. இந்தப் பொருள், “ஓடி ஓடி”
  என்ற பாசுரத்திலும் சொல்லிற்றே? என்னில், அங்கு, அவர்கள் ஆஸ்ரயித்தால்
  பலம் இல்லை என்றது; இங்கு, தேவர்கள் சர்வேச்வரன் பக்கலிலே
  கொடுபோய்ச் சேர்ப்பர்கள் என்கையாலே கூறியது கூறல் இல்லை.

2. ‘அவனையே ஆராதிக்கப் பெறில் அழகிது’ என்றது, மேற்பாசுரத்தில்
  “சென்று தொழுதுய்மின்” என்றதனைக் கடாக்ஷித்து. ‘அவனுக்குச் சரீரமாக
  உள்ளவர்கள்’ என்றது, “மூர்த்தியாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

3. இவன் நிறுத்த வேண்டுமோ? தாங்களாகவே நிற்க மாட்டார்களோ? என்ன,
  ‘தியானம் செய்தற்குரிய’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.