|
ய
யிற்று. தியானம் செய்கிற
இவன் எடுத்த, நிறுத்த, நிற்கின்றவையே யன்றோ அந்தத் தெய்வங்கள். நும் உள்ளத்துக் கொள்ளும்
தெய்வங்கள் - உங்களுடைய இருதயங்களிலே கொள்ளுகின்ற தேவதைகள். ‘புறம்பே சிலர் அறியில் பரிஹசிப்பர்கள்’
என்று தாங்களே அறிந்ததாக உபாசிப்பவர்கள் என்பார் ‘உள்ளத்துக் கொள்ளும்’ என்கிறார்.
உம்மை உய்யக்கொள்-உங்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டார்கள் ஆகிறபடி. மறுத்தும் அவனோடே
கண்டீர்-நீங்கள் ‘அவனிலும் இவர்கள் அடையத் தக்கவர்கள்’ என்று பற்ற, இவர்கள் உங்களை அவன்
பக்கலிலே கொண்டுபோய் அன்றோ காப்பாற்றுவது. 1”காப்பாற்றுவதில் நிலைநிற்கின்றவரும்
எல்லா ஆத்மாக்களுக்கும் ஈச்வரனாயும் மஹாத்மாவாயும் இருக்கிறவருமான விஷ்ணுவைத் தவிர,
காப்பாற்றும் திறன் வேறு ஒருவர்க்கும் இல்லை என்பது பிரசித்தம்” என்கிறபடியே, என்றும் இரக்ஷண
தர்மம் கிடப்பது அவன் பக்கலிலேயாம்.
வேறு சிலரை ஆராதிக்க
அவனே பலத்தைக் கொடுக்கிறவன் ஆவான் என்பது என்? என்ன, மார்க்கண்டேயனும் கரியே-இவ்வர்த்தத்திற்குச்
சாக்ஷி மார்க்கண்டேயன். அம்மார்க்கண்டேயன் பலநாள் தேவனை ஆராதிக்க, அவனைப் பார்த்து,
‘பலநாள் நீ நம்மை ஆஸ்ரயித்தாய், இந்த ஆஸ்ரயணம் பாழே போக ஒண்ணாது, உன்னோடு என்னோடு வேற்றுமை
இல்லை, உனக்கு ஒரு புகல் காட்டித் தருகிறேன் போதரு’ என்று சர்வேச்வரன் பக்கலிலே கொண்டு சென்று,
அவனுடைய விருப்பத்தைத் தலைகட்டிக் கொடுத்
_____________________________________________________
1. இரக்ஷண தர்மம் மற்றைத்
தேவர்கட்கு இல்லையோ? என்ன, ‘இல்லை’
என்பதனைப் பிரமாணத்தோடு காட்டுகிறார் ‘காப்பாற்றுவதில்’
என்று
தொடங்கி.
“நஹிபாலன சாமர்த்யம்
ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்திதௌ ஸ்திதம் மஹாத்மாநம்
பவதி அந்யஸ்ய கஸ்யசித்”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 :
19.
“அருள்குடை யாக அறங்கோ
லாக
இருநிழல் படாமை மூவே ழுலகமும்
ஒருநிழ லாக்கிய ஏமத்தை
மாதோ.”
என்பது, பரிபாடல். 3. 74-76.
|