பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
60

தான்; ஆனபின்னர், இதற்குச் சான்று அவனே என்றபடி. கறுத்த மனம் ஒன்றும் வேண்டா-புன் சிறு தெய்வங்களைப் பரம்பொருளாக நினைத்து இருக்கும் தண்ணிய மனம் உங்களுக்கு வேண்டா. கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை- 1“வேதங்களும் மூன்று அக்நிகளும் ஐந்து ஆஹீதிகளும் எல்லாத் தேவர்களும் தேவகியின் புத்திரனான கண்ணபிரானே” என்கிறபடியே, அவனுக்குச் சரீரமாக அல்லது ஸ்வதந்திரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை. “எந்த எந்த பக்தன் எந்த எந்தச் சரீரத்தைச் சிரத்தையுடன் அருச்சிப்பதற்கு விரும்புகிறனோ அவன் அவனுக்கு அந்த அந்தச் சிரத்தையையே நிலைநிற்கும்படி செய்கிறேன்” என்கிறபடியே, அக்கண்ணபிரானுக்குச் சரீரமாக உளராகில் ஆமித்தனை. இறுப்பது எல்லாம் அவன் மூர்த்யாயவர்க்கே இறுமின் - ஆனபின்பு, நீங்கள் அவ்வத் தேவர்கட்குக் கொடுக்கும் சமாராதநத் திரவியங்களை எல்லாம் ‘இவர்கள் அவனுக்குச் சரீரமாக இருப்பவர்கள்’ என்று புத்திபண்ணி, அவர்களுக்குக் கொடுக்கப் பாருங்கோள். ‘இறுப்பது எல்லாம்’ என்றது, “தேவதாந்தராய-பிற தேவதையின் பொருட்டு” என்று தோற்றுகிற நித்திய நைமித்திகக் காமங்களையெல்லாம் என்றபடி. ‘அவன் மூர்த்தியாயவர்க்கே’ என்றது, அவனுக்குச் சரீரமாக இருக்கிற அவர்களுக்கே என்றபடி. ஆக, “அந்தராத்மா சர்வேச்வரன்’ என்று புத்திபண்ணி அவனுக்குச் சாமாராதனம் செய்கிறோம் என்ற எண்ணத்தோடு செய்யுங்கோள் என்றபடி.

(7)

_____________________________________________________

1. “கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை” என்றதனால், வேறு தெய்வங்களே
  இல்லை என்கிறாரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘வேதங்களும்’ என்று தொடங்கி.

  “ஜோதீம்ஷி சுக்ராணிச யாநி லோகே த்ரயோ லோகா : லோகபாலா:
   திரயீச, திரய : அந்நய : ச ஆஹீதய:ச பஞ்ச ஸர்வே தேவா தேவகீ
   புத்ர ஏவ” என்பது, மஹாபாரதம் வீடுமப்பர்வம்.

  “யோ யோ யாம் யாம் தநும் பக்த:சிரத்தயா அர்ச்சிதும் இச்சதி
   தஸ்ய தஸ்ய அசலாம் சிரத்தாம் தாமேவ விததாமி அஹம்”

  என்பது, ஸ்ரீ கீதை. 7 : 21.

      இவற்றால், மற்றைத் தேவர்கள் சர்வேச்வரனுக்குச் சரீரமாகையாலே
  பரதந்திரப் பட்டவர்கள் என்பதனைத் தெரிவித்தவாறு.