பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
70

New Page 1

கோள்’ என்று பிறரைத் திருத்தினவர், ‘நீர் செய்யப் பார்க்கிற இது அநீதி, அதனைத் தவிரும்’ என்று பிறர் திருத்தவும் திருந்தாதபடி ஆனார். பகவத் விஷயத்தில் ஈடுபடும்படியாகப் பிறரைத் திருத்துகிற இவரை, ‘பகவானிடத்தில் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப் பார்த்தால் திருந்தாரே அன்றோ.

    1
அன்றிக்கே, “ஏறாளும் இறையோனும்’ என்று திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத யானும் என்னுடைமையும் வேண்டா என்று அலாபத்தாலே கூப்பிடும் தம்மோடு ஒக்கக் கூப்பிடுகைக்குத் துணை தேடி உலக ஒழுக்கத்தை நினைத்த இடத்து, தாம் பகவத் விஷயத்திலே ஈடுபாடுடையவராய் இருக்குமாறுபோலே அவர்கள் இதர விஷயங்களிலே ஈடுபாடுடையவராய் இருக்கிறபடியைக் கண்டு, அவர்கள் கேட்டிற்கு நொந்து அவர்களுக்குப் பகவானுடைய பரத்துவத்தை எடுத்துக் கூறித் திருத்தி, ‘இவர்களிலே ஒருவனாக இருக்கிற என்னை, இவர்களையும் திருத்தும்படி ஆக்குவதே சர்வேச்வரன்!’ என்று அவன் தமக்குச் செய்த உபகாரத்தை நினைத்து, தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனம் செய்து, இப்படிப் பிறருடைய நலத்துக்கு வேண்டுவன எல்லாம்

_____________________________________________________

1. “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியிலிருந்து இயைபு
  அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, வேறும் ஒரு வகையில் இயைபு அருளிச்
  செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. என்றது, “மலியும் சுடரொளி
  மூர்த்தி, மாயப்பிரான், கண்ணன் தன்னை” என்ற மூன்று விசேஷணங்களை
  “மாசறுசோதி, ஆசறு சீலனை, ஆதி மூர்த்தியை” என்ற பெயர்களாலே
  எடுத்து அருளிச்செய்த காரணத்தாலே, மேல் திருவாய்மொழிக்கும்
  இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்தார் மேல்.
  இத்திருவாய்மொழியில் வருகின்ற “நாடி, எனை நாளையம்”, “முன் செய்ய
  மாமை இழந்து,” என்பன போன்ற பகுதிகளைக் கடாக்ஷித்து “ஏறாளும்
  இறையோனும்” என்ற திருவாய்மொழியிலிருந்து இயைபு அருளிச்செய்கிறார்
  எனக் கொள்க. ‘தம்மோடு ஒக்க’ என்று தொடங்கும் வாக்கியம், “நண்ணாதார்
  முறுவலிப்ப” என்ற திருவாய்மொழியின் கருத்து. ‘அவர்களுக்குப்
  பகவானுடைய’ என்று தொடங்கும் வாக்கியம், “ஒன்றும் தேவும்” என்ற
  திருவாய்மொழியின் கருத்து. ‘இவர்களிலே’ என்று தொடங்கும் வாக்கியம்,
  “கையார் சக்கரத்து” என்ற திருவாய்மொழியின் கருத்து. ‘தாம் திருத்தத்
  திருந்தின’ என்று தொடங்கும் வாக்கியம். “பொலிக பொலிக” என்ற
  திருவாய்மொழியின் கருத்து. கோள்’ என்று பிறரைத் திருத்தினவர், ‘நீர்
  செய்யப் பார்க்கிற இது அநீதி, அதனைத் தவிரும்’ என்று பிறர் திருத்தவும்
  திருந்தாதபடி ஆனார். பகவத் விஷயத்தில் ஈடுபடும்படியாகப் பிறரைத்
  திருத்துகிற இவரை, ‘பகவானிடத்தில் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப்
  பார்த்தால் திருந்தாரே அன்றோ.