பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
69

மூன

மூன்றாம் திருவாய்மொழி - “மாசறு சோதி”

முன்னுரை

    ஈடு :- 1“மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை” என்று, வடிவழகையும் குணங்களையும் சௌலப்யத்தையும் அநுசந்தித்தார்; இப்படி அநுசந்தித்து, சுலபனுமாய் ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனுமாய் அவை இல்லையேயாகிலும் விட ஒண்ணாத வடிவழகையுமுடையனான இவனோடு மெய்யுறு புணர்ச்சியை விரும்பி அவனை அணைக்கக் கோலிக் கையை நீட்ட, அவன் அகப்படாமல் கைகழிந்து நிற்க, அதனாலே கலங்கி ஒரு பிராட்டி தசையை அடைந்து மடல் எடுக்கையிலே புகுகிறார் இத்திருவாய்மொழியில். 2மடல் எடுக்கையாவது, போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாம். 3‘அநீதி செய்யாதே கொள்ளுங்

_____________________________________________________

1. மேல், தாம் திருத்தத் திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மங்களாசாசனத்தைச்
  செய்த இவர்க்கு, இத்திருவாய்மொழியில் மடல் எடுக்கும்படியான ஆற்றாமை
  வருகைக்குக் காரணம் என்? என்னும் வினாவிற்கு விடை இறுக்கும் மூலமாக,
  மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
  அருளிச்செய்கிறார் “மலியும்” என்று தொடங்கி. இம்மூன்றிலும், “பும்ஸாம்
  திருஷ்டி சித்தாபஹாரிணம்” என்கிறபடியே, வடிவழகே மனக் கவர்ச்சியைச்
  செய்வதாகையாலும், “காந்தனது பேரழகு தான் விரும்பும் பெண்”
  என்பவாதலானும், இவரும் “மாசறு சோதி” என்று முதலில் வடிவழகையே
  அருளிச்செய்கையாலும், அவன் வடிவழகிலே பர்யவஸிப்பிக்கைக்காக, மேலே
   கூறிய மூன்று குணங்களையும் அவரோகணக் கிரமத்திலே விரிக்கிறார்
  ‘இப்படி அநுசந்தித்து’ என்று தொடங்கி. பர்யவசித்தல்-சென்று முடிவு
  பெறுதல்.

2. மடல் எடுத்தல் என்பது, துணிவுள்ள காரியமுமாய், மிகச்சிறிய
  பலமுமாயிருக்கும் என்பதனைக் காட்டுகிறார் ‘மடல் எடுக்கையாவது’ என்று
  தொடங்கி.

3. “என்னை அழைத்துக்கொண்டு சேறல் அவருக்குத் தக்கதாம்” என்று
  இருக்க வேண்டிய இவர், நீதியல்லாத காரியத்தைச் செய்யத் தொடங்குவது
  என்? என்ன, அதற்குச் சுவாபதேசத்திலே விடை அருளிச்செய்கிறார் ‘அநீதி
  செய்யாதே’ என்று தொடங்கி. சுவாபதே சம்-தன் பேச்சு; உள்ளுறை.