|
ப
படி ஆற்றாமை கரைபுரண்டாலும்
பெண்கள் மடல் ஊரக்கடவர்கள் அல்லர்; நாயகன் தன் ஆற்றாமையாலே மடல் எடுக்க உலகின்மேல் வைத்துச்
சொல்லுவான், பின் ‘நான்வரை பாயப் புகாநின்றேன், மடல் எடுக்கப் புகாநின்றேன்’ என்று தோழிக்கு
வந்து அறிவிப்பான், அறிவித்த பின்னரும் அவள் கூட்டிற்றிலளாகில் பின்பு அவன் இது செய்யக்கடவன்;
இத்தனை அல்லது, 1பெண்கள் மடல் எடுக்கக் கடவர்கள் அல்லர் என்று இங்ஙனே ஒரு மரியாதை
கட்டினார்கள் தமிழர்கள்; இங்கு அங்ஙன் அன்றிக்கே, பிராட்டி தான் மடல் எடுப்பதாக இராநின்றது;
தமிழர் ‘பெண்கள் மடல் எடுக்கக்கடவர் அல்லர்’ என்று சொன்ன இது, சேரும்படி என்? என்னில்,2
அவர்கள் ஒரு தலையிலேதான் அதனை இசைந்தார்களே, அப்படி இசைகைக்குக் காரணம், ஆற்றாமையே; அவ்வாற்றாமை
இருவர்க்கும் ஒத்த பின்பு ஒருவர்க்கு மாத்திரம் ஒதுக்குவார் யார்? 3இதற்கு ஒரு மரியாதை
கட்டுகையாவது, ஆசைக்கு ஒரு வரம்பு இட்டார்களாமித்தனை. அப்போது பின்னை அரசர் ஆணைக்கு நிற்க
வேணும், இன்றேல் வேலியடைத்தால் நிற்கவேணும்; ஆகையால், அவர்கள் அன்பின் தன்மையை அறிந்திலர்
_____________________________________________________
“கடலன்ன காமம் உழந்தும்
மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்.”
என்பது, திருக்குறள்.
1. “எத்திணை மருங்கினும்
மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை
யான”
என்பது, இலக்கணம். தொல்.
பொருள்.
2. ஆடவர்கள் மடல் ஊர்கைக்குக்
காரணம் எதுவோ, அந்தக் காரணம்
பெண்களுக்கும் உண்டு ஆகையாலே, பெண்கள் மடல் ஊரத் தடை இல்லை
என்று மறுக்கிறார் ‘அவர்கள்’ என்றது முதல், ‘அறிந்திலர் களாமித்தனை’
என்றது முடிய.
3. ‘இதற்கு ஒரு மரியாதை’
என்று தொடங்கும் வாக்கியத்திற்குக் கருத்து,
அன்பின் தன்மையை அறியாமையே அன்றோ இங்ஙனம்
வரம்பு கட்டுதற்குக்
காரணம் என்பது. ‘அப்போது’ என்றது, ஆசை காரணமாக வருவதன்றிக்கே,
‘ஆடவர்களே மடல் எடுக்கக் கடவர்கள்’ என்று விதி மூலமாகக் கல்பித்த
போது என்றபடி. ‘வேலி
யடைத்தால் நிற்க வேணும்’ என்றதன் பின்னர்,
இப்படி நில்லாமல் பெண்கள் மடல் எடுப்பதில்
ஈடுபடுகையாலும், ஆற்றாமை
இரண்டு தலைக்கும் சமம் ஆகையாலும் பெண்கள் மடல் ஊரத் தட்டு
இல்லை
என்பதனைச் சேர்த்துக்கொள்க.
|