|
கள
களாமித்தனை. 1வரம்பு
அழியவாகிலும் முகங்காட்டி வைத்துக்கொண்டு தரிக்க வேண்டும்படியாய் இருப்பது ஒரு விஷயம் புறம்பு
இல்லையே; 2இங்ஙனம் இருப்பார் சிலரைக் கல்பித்துக்கொண்டார்கள் இத்தனையே.
இனி, 3இவர்தாம்,
“வளவேழ் உலகு” என்ற திருவாய்மொழியில், நாம் அவனோடே கலத்தலாகிற இது அவனுக்குத் தாழ்வினை
விளைவிப்பதாம், நம் பேற்றுக்காக
______________________________________________________
1. ஆயின், பெண் மடல்
உலகத்தில் இல்லையே? என்ன, ‘வரம்பு அழியவாகிலும்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
வரம்பாவது-
பண்மைக்குரிய குணங்கள். ‘விஷயம் புறம்பில்லையே’ என்றவிடத்தில்,
‘ஈச்வரனைப்
போல’ என்பது எஞ்சி நிற்கிறது. ஈச்வரனை ஒழியப் புறம்பு
இல்லை என்றபடி. ஆகையாலே, இவள்
பகவத் விஷயத்தில் மடல்
ஊரத் தட்டு இல்லை என்பதனைத் தெரிவித்தபடி.
“மடன்மாப் பெண்டிர் ஏறார்
ஏறுவர்
கடவுளர் தலைவ ராய்வருங்
காலே”
என்பது, பன்னிருபாட்டியல்.
இச்சூத்திரத்தால்,
கடவுளரைத் தலைவராக வைத்துப் பாடுமிடத்து
மகளிரும் மடல் ஏறுவர் என்பது பெறப்படுதல் காணலாகும்.
2. புறம்பு விஷயம் உண்டாய்
வாசவதத்தை முதலாயினார் மடல் எடுத்ததாய்
இருக்கிறதே? என்ன, ‘இங்ஙனம் இருப்பார்’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார். இங்ஙனம் கல்பித்துக் கொள்ளுகையாலே, அர்த்த
ஸ்திதியைப்
பார்த்தால் ஆண் மடலும் பெண் மடலும் இல்லை என்பது
கருத்து.
3. மேலே, மடல் எடுத்தல்
அந்யாபதேச சமாதிக்குச் சேராது என்று சங்கித்துப்
பரிகரித்து, ஸ்வாபதேசத்திலும் இது சேராது
என்று மூன்று வகையாகச்
சங்கித்துப் பரிஹரிக்கிறார். ‘இவர்தாம்’ என்றது முதல், ‘அவனும்
அவனுடைமையும் வேண்டா என்கிறார்’ (பக். 78.) என்றது முடிய.
‘இவர்தாம்’ என்றது முதல்,
‘ஆக, இவர் தம் ஸ்வரூபத்தோடும் சேராது’
என்றது முடிய, முதல் சங்கை. ‘ஆசையற்றவர்களாயிருப்பவர்களும்
செய்வது
ஒன்று அன்று’ என்பது, இரண்டாவது சங்கை. ‘ஞானாதிகராய் இருப்பவர்களும்
செய்வது ஒன்று
அன்று’ என்பது, மூன்றாவது சங்கை.
‘ஸ்வரூபத்தோடும்
சேராது’ என்றது, “வளவேழுலகின்” என்ற
திருவாய்மொழியாலும், “ஏறாளு மிறையோனும்” என்ற திருவாய்
மொழியாலும்
சொன்ன சேஷத்வ பாரதந்திரியத்தோடு கூடின ஸ்வரூபத்தோடும் சேராது
என்றபடி. ஞானாதிகர்-சிஷ்டர்.
ஆனால்-இப்படியானால், இங்குத்தைக்கும்
இவ்விடத்திற்கும். வேண்டுவன-வேண்டும் பரிஹாரங்கள்.
|