பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
76

அவ

அவனோடே கலந்து அவனுக்குத் தாழ்வினை விளைப்பதிற்காட்டில் நாம் அகன்று முடிந்தாகிலும் அவனுக்கு அதிசயத்தைச் செய்ய அமையும் என்று இருக்குமதனோடும் சேராது; இனி, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத ஆத்மாவும், ஆத்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களும் நசித்துப்போக அமையும் என்று சொன்ன அதனோடும் சேராது; ஆக, இவர்தம் ஸ்வரூபத்தோடும் சேராது. ஆசையற்றவர்களாய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று. ஞானாதிகராய் இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று. ஆனால், இது இருந்தபடி என்? என்னில், இவற்றிற்கெல்லாம் சமாதானம், பட்டர் திருமடல் வியாக்கியானம் அருளிச்செய்கிறபோது அருளிச்செய்தருளினார்; இங்குத்தைக்கும் வேண்டுவன சொல்ல வேணுமே அன்றோ.

    1
ஞானத்தால் மேம்பட்டவர்களாய் இருப்பவர்கள் ஜனக குலத்தில் பிறந்தவர்களாயுள்ளவர்களுக்கு மேல் இலரே அன்றோ; அக்குடியிலே பிறந்த பிராட்டியானவள், 2“எந்தப் பிராட்டி முன்பு ஆகாசத்தில் சஞ்சரிக்கின்றவைகளான பூதங்களாலும் பார்ப்பதற்கு முடியாதவளோ அந்தப் பிராட்டியை இப்பொழுது இராஜ வீதியிலுள்ள மக்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள்” என்கிறபடியே, பெருமாள் காட்டிற்கு எழுந்தருளுகிற காலத்தில் 3“மன்னன் இராமன்பின் வைதேகி என்றுரைக்கும், அன்ன நடைய அணங்கு நடந்திலளே” என்கிறபடியே, அவர் பின்னே புறப்பட்டுப்போகையாலே சிஷ்டாசாரம் உண்டாயிருந்தது; 4மேலும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற இவர்

____________________________________________________

1. மூன்று சங்கைகளையும் அவரோகணக் கிரமத்திலே பரிகரிப்பதாகத்
  திருவுள்ளம்பற்றி, அவற்றில், ஈற்றிற்கூறிய ‘ஞானாதிகராய் இருப்பவர்களும்
  செய்வது ஒன்று அன்று’ (சிஷ்ட அநுஷ்டானம் இல்லை) என்ற சங்கைக்கு,
  சிஷ்ட அநுஷ்டானம் உண்டு என்று கூறி அதனைப் பரிகரிக்கிறார்
  ‘ஞானத்தால்’ என்றது முதல், ‘பிரமாணமாகக் கொள்ளக் கடவதன்றோ’
  என்றது முடிய.

2. “யாநசக்யா புரா த்ருஷ்டும் பூதை: ஆகாசகைரபி
   தாம் அத்ய சீதாம் பஸ்யந்தி ராஜமார்க்கதா ஜநா:

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 38. 8.

3. பெரிய திருமடல், 51.

4. இவ்வாழ்வார்க்கு ஒரு சிஷ்டாசாரம் வேண்டுமோ, இவருடைய ஆசாரமே
  நமக்குப் பிரமாணதமம் அன்றோ என்கிறார் ‘மேலும்’ என்று தொடங்கி.