|
அ
அநுஷ்டிக்கையாலே இதுதானே
பிரமாணமாகத் தட்டு இல்லையே அன்றோ. 1“பெரியவன் எது எதனைச் செய்கிறானோ அது
அதனையே மற்ற ஜனங்களும் செய்கிறார்கள்; அந்தப் பெரியவன் எதைப் பிரமாணமாகச் செய்கிறானோ
அதனையே உலகமும் அநுசரிக்கின்றது” என்கிறபடியே, சத்துக்களுடைய அநுஷ்டானத்தைப் பிரமாணமாகக்
கொள்ளக்கடவதன்றோ. 2ஆனாலும், காமம் விலக்கப்பட்டிருக்கிறதே? என்னில், அவை
நிலைநில்லாமையாலே சிற்றின்பத்தில் காமமேயேயன்றோ விலக்கப்பட்டிருக்கிறது. பகவத் விஷயத்தில்
காமத்தை “தியானம் செய்யத்தக்கவன்” 3என்கிறபடியே, விதியாநின்றதே அன்றோ. வேதாந்தங்களிலே
விதிக்கப்பட்ட பக்தியை அன்றோ இங்குக் காமம் என்கிறது. 4“வளவேழ் உலகு”
_____________________________________________________
1. ஞானாதிகர் செய்தது பிரமாணம்
என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘பெரியவன்’ என்று தொடங்கி.
“யத்யத் ஆசரதி ஸ்ரேஷ்ட:
தத் ததேவ இதரோஜந:
ஸயத் பிரமாணம் குருதே
லோக: தத் அநுவர்த்ததே.”
என்பது, ஸ்ரீ கீதை, 3 : 21.
2. ‘ஆசை அற்றவர்களாய்
இருப்பவர்களும் செய்வது ஒன்று அன்று’ என்ற
இரண்டாவது சங்கையை அநுவதித்துப் பரிஹரிக்கிறார்
‘ஆனாலும்’ என்றது
முதல், ‘பக்தியை அன்றோ இங்குக் காமம் என்கிறது’ என்றது முடிய.
3. ஆத்மாவா அரே த்ரஷ்டவ்ய
: ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ
நிதித்யாசிதவ்ய:”
என்பது, பிரு. உப. 6 : 5.
“இனிக் காமம் நன்றாமாறு
உண்டு: ‘சுவர்க்கத்தின்கண் சென்று போகம்
துய்ப்பல்’ ‘உத்தர குருவின்கண் சென்று போகம்
துய்ப்பல்’ என்றும், ‘நன்
ஞானம் கற்று வீடு பெறுவல்’ என்றும், ‘தெய்வத்தை வழி படுவல்’ என்றும்
எழுந்த காமம் கண்டாயன்றே? மேன்மக்களாலும் புகழப்பட்டு, மறுமைக்கும்
உறுதி பயக்குமாதலின், இக்காமம்
பெரிதும் உறுதியுடைத்து என்பது” என்பது,
இறையனார் களவியலுரை.
4. ‘இவர்தம் ஸ்வரூபத்தோடும்
சேராது’ என்ற முதல் சங்கையை அநுவதித்து,
அதற்கு ஆறு வகையாகப் பரிஹாரம் சொல்லுவதாகத் திருவுள்ளம்பற்றி,
முதலில் ‘மடல் எடுத்தல்’ அதிசயத்தை உண்டு பண்ணுவது என்று
பரிஹரிக்கிறார் “வளவேழுலகு” என்றது
முதல், ‘செய்கிறார் ஆகையாலே’
என்றது முடிய.
|