பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
78

என

என்ற திருவாய்மொழியில், நாம் கிட்டுகை அவனுக்குத் தாழ்வினைத் தருவதாம் என்று அகன்ற இவர், அத்தலையை அழித்து முகங் காட்டுவித்துக்கொள்ளப் பார்க்கிற இது இவர் ஸ்வரூபத்தோடு சேருமோ? என்னவும் வேண்டா; அங்கு அகல நினைத்ததும் அத்தலைக்கு வரும் தாழ்வினை நீக்குகைக்காக அன்றோ; தமக்கு ஆற்றாமை கரை புரண்டு இருந்தது, ‘தன்னை ஆசைப்பட்டார் பெறாமலே முடிய, முகங்காட்டாமலே இருந்தான்’ என்கிற தாழ்வினை நீக்குகைக்குச் செய்கிறாராகையாலே. 1அங்கு அகன்றது ஞான காரியம்; இங்கு மேல் விழுகிறது பக்தியின் காரியம். 2இத்தனை கலங்கப் பண்ணிற்றில்லையாகில், அத்தலையில் வைலக்ஷண்யத்துக்குத் தாழ்வாம்; இவர்தாம் இப்படிக் கலங்கிற்றிலராகில் இவருடைய பிரேமத்துக்குத் தாழ்வாம். 3அவன் அருளியதும் மதி நலமே அன்றோ, அவை படுத்துகிற பாடே அன்றோ இவை எல்லாம். 4மதியின் காரியம் அது; பக்தியின் காரியம் இது.

_____________________________________________________

      ‘செய்கிறார் ஆகையாலே’ என்றதனை, மேலேயுள்ள ‘இவர்
  ஸ்வரூபத்தோடு சேருமோ? என்னவும் வேண்டா’ என்றதனோடு முடித்துக்
  கொள்க. ‘இவர் ஸ்வரூபத்தோடு’ என்றது, ஈச்வரனுக்கு உயர்வினை
  விளைக்கக்கூடியதான சொரூபத்தோடு என்றபடி.

1. இரண்டாவது பரிஹாரத்தை அருளிச்செய்கிறார் ‘அங்கு அகன்றது’ என்றது
  முதல், ‘பக்தியின் காரியம் இது’ என்றது முடிய. என்றது, பக்தி காரியமான
  கலக்கத்தாலே உண்டாகும் காரியங்கள் ஸ்வரூபத்திற்கு மாறுபட்டனவானாலும்
  தவிரப் போகா என்றபடி.

2. இப்படி ஈச்வரனுக்குத் தாழ்வினை விளைத்தாகிலும் கிட்டப்பார்க்கிற இது
  கலக்கத்தாலே அன்றோ, அப்படிக் கலங்குகைக்குக் காரணம் என்? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இத்தனை’ என்று தொடங்கி, ‘கலங்கப்
  பண்ணிற்றில்லையாகில்’ என்றது, எல்லை கடந்த ஈடுபாட்டினை
  விளைத்ததில்லையாகில் என்றபடி. ‘பிரேமத்திற்குத் தாழ்வாம்’ என்றது,
  மற்றையோருடைய காதலைக்காட்டிலும் இவர் காதலுக்கு வேறுபாடு
  இல்லாமையாலே காதலுக்குத் தாழ்வாம் என்றபடி. ஆக, சர்வேச்வரனுடைய
  வைலக்ஷண்யத்தாலும், இவர் காதலே உருவாகவுடையராதலானும் கலங்கினார்
  என்றபடி.

3. ‘வளவேழுலகு என்ற திருவாய்மொழியில் அகன்றது, ஞான காரியம்; இது
  பக்தி காரியம்’ என்பதற்கு, இவர்க்கு ஞான பக்திகள் உண்டோ? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவன் அருளியதும்’ என்று தொடங்கி.

4. ‘அங்கு அகன்றது ஞான காரியம்’ என்று கூறிய வாக்கியத்தின் விவரணம்,
  ‘மதியின் காரியம் அது’ என்று தொடங்கும் வாக்கியம்.