பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
79

1இன

    1இனித் தான் சித்தோபாயத்தை மேற்கொண்டு அது பலியாவிட்டால் ஸ்வரூபத்தை வேறு வகையாகச் செய்யுமித்தனை அன்றோ; 2அவன் ஸ்வரூபம் வேறுபட்டால் இத்தலை சொல்ல வேண்டாவே அன்றோ. 3இத்தலையில் கர்த்தவ்யம் இல்லையாகில் அவனுக்கு அசக்தி இல்லையாகில் நடுவில் விளம்பத்துக்குக் காரணம் என்? என்று தோற்றுமே அன்றோ. 4இவர்தாம் ‘மடல் எடுக்கக் கடவேன்’ என்று துணிந்த துணிவுக்கு மேற்பட அநுஷ்டிக்க வேண்டு

_____________________________________________________

1. மூன்றாவது பரிஹாரத்தை அருளிச்செய்கிறார் ‘இனித் தான்’ என்றது முதல்,
  ‘என்று தோற்றுமே யன்றோ’ என்றது முடிய. ஸ்வரூபத்தை வேறு வகையாகச்
  செய்யுமித்தனை’ என்றது, சர்வேச்வரனே ரக்ஷகன் என்றிருக்கும் தன்மை
  நெகிழும் என்றபடி. ஸ்வரூபம்-அநந்ய சரணத்வம். சித்தோபாயம்-சர்வேச்வரன்.

2. “அழைத்துக்கொண்டு செல்லுதல் அவனுக்குத் தக்க காரியம்” என்று
  இராமல், மாறுபட இப்படிச் செய்யலாமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘அவன் ஸ்வரூபம்’ என்று தொடங்கி. அவன்
  ஸ்வரூபம்-அவனுடைய காப்பாற்றுகின்ற தன்மை.

3. அவனுடைய ரக்ஷிக்குந்தன்மை இப்போது வேறுபட்டது என்கைக்குக்
  காரணம் யாது? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இத்தலையில்’
  என்று தொடங்கி. கர்த்தல்யம்-செய்யத் தக்கது. விளம்பம்-தாமதம்.

4. ஆக, மடல் எடுக்கையை உடன்பட்டு அதற்குப் பரிஹாரத்தை
  அருளிச்செய்தார் இதுகாறும். இனி, இங்ஙனம் பரிஹாரம் கூற வேண்டுவது
  இவர் தாம் மடல் எடுத்தால் அன்றோ. “ஊர்ந்தும்” என்கையாலே, மடல்
  எடுக்க இல்லையே என்று உடன்படாமலே நாலாம் பரிஹாரத்தை
  அருளிச்செய்கிறார் ‘இவர் தாம்’ என்றது முதல், ‘கலக்கம் இன்றிக்கே
  இருக்கிறது காணும் இவர்க்கு’ என்றது முடிய.

  “எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
  பொற்புடை நெறிமை இன்மை யான”

  என்று தொல்காப்பியச் சூத்திரத்தின் விசேட உரையில், நச்சினார்க்கினியர்

  கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர்
  மடல்ஏறார் மைந்தர்மேல் என்ப - மடலூர்தல்
  காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான்
  வேட்டமா மேற்கொண்ட போழ்து.

  என்றாராலோ? எனின், ‘இது மடல் ஏற்றன்று: ஏறுவல் எனக் கூறிய
  துணையேயாம்’ என்பர். இதனால், மகளிர் ‘மடல் ஏறுவேன்’ என்று கூறும்
  வழக்கு உண்டு என்பது தெளிதல் தகும். இத்திருப்பதிகத்தின் 8-வது
  திருப்பாசுரத்தின் வியாக்கியானத்தைப் பார்க்கவும்.