|
வ
வது இல்லையே யன்றோ குணாதிக
விஷயம் ஆகையாலே. ஆற்றாமையையும் உண்டாக்கி அம்பும் தொடுக்க வேண்டும்படியான விஷயத்தை அன்றே
இவர் பற்றியது. 1கடலைப் பெருமாள் சரணம் புக்க இடத்தில் அக்கடல் தானாக வந்து
முகங்காட்டாமையாலே நாலு மூன்று அம்பை விட, உடம்பிலே பாதி வெந்த பின்பேயன்றோ வந்து முகங்காட்டியது;
இங்கு அது வேண்டாமையாலே, 2“ஓ இலக்குமணா! வில்லைக் கொண்டு வா, ஆசீ விஷத்திற்கு
ஒப்பான பாணங்களைக் கொண்டு வா, சமுத்திரத்தை வற்றச்செய்யப் போகிறேன், வானர வீரர்கள்
கால்களால் நடந்து செல்லட்டும்” என்றதைப் போன்று, ‘மடல் ஊர்வேன்’ என்று அச்சம்
உறுத்தி முகங்காட்டுவித்துக்கொள்ளப் பார்க்கிறார். 3தம்முடைய ஸ்வரூபத்தில்
கலக்கம் தொடர்ந்து நிற்கச் செய்தேயும் அவனுடைய குணஞானத்தில் கலக்கம் இன்றிக்கே
இருக்கிறது காணும் இவர்க்கு.
4“ஏறாளும்
இறையோனும்” என்ற திருவாய்மொழியில், அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா
என்று முடித்துக்கொள்வாய் பார்த்த
____________________________________________________
1. குணாதிக விஷயம் ஆனால்
முயற்சி மாத்திரம் போதியதாமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கடலை’ என்று தொடங்கி.
2. “சாபமாநய சௌமித்ரே
சராந் ச ஆசீவிஷோபமாந்
சாகரம் சோஷயிஷ்யாமி
பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா.”
என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.
ஆசீவிஷம்-பாம்பு.
3. மடல் எடுக்கும்படி கலங்குகிற
தசையிலே ‘குணாதிகன்’ என்று குண
ஞானம் உண்டாகக் கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘தம்முடைய’ என்று தொடங்கி.
4. மேலே, (பக். 76.)
‘இனி ஏறாளும் இறையோனும்’ என்று தொடங்கும்
வாக்கியத்தால் கூறிய சங்கையை அநுவதித்துப் பரிஹரிக்கிறார்.
‘ஏறாளும்
இறையோனும்’ என்றது முதல், ‘வஸ்துவின் ஸ்வரூபந்தான் இருப்பது’
என்றது முடிய. இது, ஐந்தாம்
பரிஹாரம். என்றது சர்வேச்வரனுடைய
உபயோகத்துக்கு உறுப்பு அல்லாத தம் ஸ்வரூப நாசத்துக்கு உடலாக
அவனை அழிக்கப் பார்க்கிறார் ஆகையாலே, சர்வேச்வரனுக்கு உயர்வினை
உண்டுபண்ணக் கூடியதான ஸ்வரூபத்திற்கு
விரோதம் இல்லையே என்றபடி.
‘அத்தலையே பிடித்து வேர்ப்பற்றோடே அழிக்க’ என்றது, அவனுக்கு
நிரூபகமான
ரக்ஷணதர்மம் இவர் மடல் எடுத்தால் அழியுமாகையாலே,
நிரூபகம் அழிந்த அளவில் நிரூபிக்கப்படுகின்ற
பொருளும் அழியும்
என்றபடி.
|